e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 8 யில் Password Reset Disk அல்லது USB உருவாக்கி பயன்படுத்துதல்.

No comments
கணணியின் பாதுகாப்பிற்காக அனைவரும் கடவுச்சொல் பயன்படுத்துவது வழக்கம். அப்படி கொடுத்த கடவுச்சொல்லை மறப்பதும் இயல்பு. மறதி மனித இனத்தின் பரம்பரை வியாதி, அந்த இக்கட்டான  வேளைகளில் கணணியை கடவுச்சொல் கொடுத்து திறக்கும் போது பிழை என்று வரும் பொழுது நீங்கள் கடுப்பாகுவது எங்களுக்கு தெரியும். இந்த நிலைமைகளை தவிர்பதற்க்கான Password Reset Disk என்ற வசதியை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் வழங்குகின்றது. 


குறிப்பு : இந்த செய்முறை Local User Accounts யில் மட்டுமே வேலை செய்யும், நீங்கள் Windows Live ID மூலம் லோக் ஒன் செய்தீர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு Password Reset Disk அமைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது Password Reset Disk உருவாக்குதல்   

முதலில் WIN+F கியை (Key) சேர்த்து அழுத்தி தேடுதல் பக்கத்தில் சென்று அங்கே "Settings" யை கிளிக் செய்யுங்கள்.


இப்போது "User Accounts" யை செலக்ட் செய்யுங்கள் 


அதை அடுத்து Control Panel லில் உள்ள "User Accounts" பக்கத்திற்கு செல்லும்,  இங்கே "Create a Password reset disk" என்ற இணைப்பை தெரிவுசெய்து தொடருங்கள்.


இப்போது திரையில் விசார்ட் தோன்றும், அடுத்து "Next " யை கிளிக் செய்வதற்கு முன்பு உங்கள் கணணியில் USB யை செருகுங்கள்.  


அடுத்து தோன்றும் திரையில் கடவுச்சொல் சாவியை (Password Key) உருவாக்க இருக்கும் USB யை தெரிவு செய்க.


அடுத்து தற்போதைய கடடுசொல்லை குறிக்க கேட்கும்


முடிந்தது,  Password Reset Disk உருவாக்கப்பட்டு விட்டது, இந்த டிஸ்க்யை பயன்படுத்தி உங்கள் கணணியில் எவர் வேண்டுமென்றாலும் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம். அதனால் டிஸ்கை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வையுங்கள்.


உங்கள் கணணியில் கடவுச்சொல்லை திரும்ப அமைத்தல் (Reset)

உங்களிடம் Password Reset Disk இருக்கும் என்றால் எதிர்காலத்தில் கடவுச்சொல்லை மறக்கும் நேரங்களில் பயன்படுத்தி கடவுச்சொல்லை திரும்ப அமைத்துக்கொள்ளலாம். நீங்கள் பிழையான கடவுச்சொல்லை கொடுக்கும் பொழுது "Reset  Password " இணைப்பு தோன்றும்.


அடுத்து கணணியில் USB யை செருகி உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள், அடுத்து "Reset  Password " இணைப்பை கிளிக் செய்தவுடன் புதிய விசார்ட் தோன்றும்.

        
அதை தொடர்ந்து நீங்கள் சரியான USB யை தெரிவு செய்யுங்கள்


பின்னர் தோன்றும் திரையில் புதிய கடவுச்சொல்லை குறிக்க கேட்கும், அதோடு கடவுச்சொல்லுக்கான புதிய Hint யை குறிக்க கேட்கும். 


முடிந்ததது இப்போது கணணிக்கான கடவுச்சொல்லை மாற்றி விட்டீர்கள் 


அடுத்த முறையும் கடவுச்சொல்லை மறந்தீர்கள் என்றால் இந்த USB கியை பயன்படுத்தி புதுப்பித்து கொள்ளுங்கள்.


நன்றி  

No comments :

Post a Comment