e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

வில்லங்கமான திரைவிமர்சனங்களின் பார்வை

No comments
இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் தயாரித்து, இயக்கி, நடித்து  வெளிவந்தாலும், அந்த படத்திற்காக செலவழித்த பணத்தை வருமானத்துடன் மீள எடுப்பது என்பது குரங்கு கையில் மாட்டிய தொப்பி கதையாய் ஆகிவிட்டது.சரி வருமானத்தை விடுவோம், போட்ட காசையே திரும்ப எடுப்பது என்பது பெரும் சவாலாய் உள்ளது தயாரிப்பாளருக்கு. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறு கிராமம் ஆகிப்போனாலும் சினிமா துறைக்கு அது பெரும் கிரகம் ஆகிப்போனதும்  இணைய வலையமைபின் ஒரு சாதனையே. ஒரு பக்கத்தில் சினிமா துறைக்கு கணணி மயமாக்கல் சாதகமாக அமைந்தாலும் அதே அளவு பாதகமாகவும் அமைந்து விட்டது.

சிறிய முதலீட்டு படமாகவோ , பெரிய முதலீட்டு படமாகவோ தயாரித்தாலும் படம் வெளியான அதே நாள் இணைய தளங்களை வெளியாகி பரபரப்பாக தெருக்கோடியெல்லாம் அமோக வருவாயில் விற்பனையாகி விடுகின்றது. காசு போட்டவன் கையில் துண்டை நீட்டி விழுகின்ற சில்லறைகளை எண்ண வேண்டியிருக்கின்றது. எவனோ ஒருவன் கஷ்டப்பட்டு மரம் ஏறி நொங்கு வெட்ட எவனோ ஒருவன் அதை குடித்த பாடகிவிட்டது ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் நிலைமையும். இப்படியே போனல்  எடுத்த படத்தை நம்பி பணம் போட்டவன் பிச்சைபாத்திரத்தை ஏந்தி ஒவ்வொரு இணைய தளத்திலும் படத்தை போடாதிங்கப்பா போடாதிங்கப்பா என்று பிச்சை கேட்டு வரவேண்டிய நிலைமையாகிவிடுவதோடு, ஆள விட்டா போதும் டா சாமி என்று கட்டி இருந்த கோமணத்தோட விவசாயம் பார்க்க ஊருக்கு கிளம்பிடுவாங்க (கிளப்பிடுவானுங்க). எந்த தயாரிப்பாளனும் தப்பி தவறியேனும் சினிமா பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டன். 

மக்களை மட்டுமே நம்பி சினிமா எடுகின்றவர்களுக்கு இபொழுது (இப்பத்தான் ஐம்பது வருடங்களுக்கு முன்னாடி இருந்து ) ஒரு புது பிரச்சனை, இணைய தளங்களிலும்,பிளாக்கர்களிலும் ஆளுக்காள் வெளிவருகின்ற படங்களை திரைவிமர்சம் என்ற பெயரில் அந்த படத்தை பற்றி குதறி ஒரு பதிவு போட்டுவிடுகின்றனர். இதை வாசித்து விட்டு நம்ம பசங்கள் எல்லோரும் திரையரங்கு பக்கமே கால் வைக்க பயபடுகின்றார்கள்.இது போக  இணையத்தளங்களில் திரைவிமர்சனம் எழுதியவரின் அபிமான வாசகர்களும் , அவரது புதிய திரைப்பட விமர்சன வருகைக்கு காத்திருப்பர்களும் ஆயிரம் ஆயிரம். அதிலும் ஒரு சிலர் திரைவிமர்சனங்களை வாசித்த பின்னர்தான் ) படம் பார்க்க போறதா இல்லையா என்ற முடிவையே எடுக்கின்றனர் இது இப்போது வாடிக்கையாகிவிட்டது (என்ன கொடுமை சரவணா இது). இப்போது படங்களுக்கு இருக்கின்ற எதிர்பார்ப்பை விட பல மடங்கு இவர்கள் எழுதும் திரைவிமர்சனங்களுக்கு இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் சில வாசகர்கள் வெளிவந்த நல்ல நல்ல படங்களையெல்லாம் இவர்களது கொடூரமான விமர்சனங்களால் பார்க்க தவறி, பின்னர் தொலைக்கட்சியில் பார்த்து விட்டு திரைவிமர்சனம் எழுதியவர்களை திட்டிதீர்த சுவாரசியமான சம்பவங்களும் உண்டு. அதிலும் ஒரு சில விமர்சகர்கள் இன்னும் அட்வான்ஸாக போய் அவர்கள் முன்னர் எழுதிய ஒரு திரைபடத்தின் விமர்சனங்கள் பற்றி பின்னர் வருத்தப்பட்டு அதற்க்குகென்று ஒரு என தனிப்பதிவு இடுவது வழக்கமாகிப்போனது.

பணம் போட்டு, பல பேர் மாசக்கணக்காக கஷ்டப்பட்டு உழைத்து வெளியிடுகின்ற  ஒரு படத்தை, வெறும் 100 ரூபாயை மட்டும் செலவழித்து திரைவிமர்சனம் இடுகின்றோம் என்று கூறி ஒரு வரியில் சரியில்லை (மொக்கை) என்று சர்வசாதரணமாக எழுதிவிட்டு போகின்றனர். போட்ட விருந்தை சரியாக பரிமாற முடியவில்லையே என்று மனம் நொந்து வாடுகின்றனர் அதற்காக உழைத்தவர்கள், படத்திற்கு கோடி கோடியா பணம் போட்டவன் நடுக்கத்தில் (இப்படியா எழுதுவானுகள்) கையை மாறி மாறி பிசைந்து கொள்கின்றனர்.  திரைவிமர்சகரிடம் இதை பற்றி கேட்டல் இது ஒரு பொழுதுபோக்கு என்று அவரும் அதை ஒரு வரியில் சொல்லிவிட்டு போகின்றனர். திரைவிமர்சனம் எழுதுவது குற்றம் என்று நான் சொல்லவில்லை, எழுதும் முறை தான் தவறாக உள்ளது என்பது எனது கருத்து. ஒருவர் இடும் திரைவிமர்சனத்தை வாசித்துவிட்டு, அந்த படத்தை பார்க்காமலேயே ஒரு சிலர் திரைவிமர்சனம் பதிவை போட ஆரம்பித்துவிடுகின்றனர். மனிதருக்கு மனிதர் ரசிப்பு தன்மை வேறுபாடும், ஒருவருக்கு பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். ஒருவருக்கு நல்லாய் இருப்பது இன்னொருவருக்கு கேட்டதாய் தோன்றலாம். இதுதான் ஒவ்வொருவரின் ஏன் திரைவிமர்சனம் எழுதுபவரின் நிலைமையும் கூட. ஒரு சிலர் குறிப்பட்ட நடிகரையோ அல்லது இயக்குனரையோ பிடிக்கவில்லை என்றால் அவர்களின் படத்தை பற்றி தவறான (தாறு மாறாய்) விமர்சனத்தை எழுதுவது சகிக்க முடியவில்லை. இதில் எந்த வித நியாய தன்மையும் இருப்பதாகவும் தென்படவில்லை.

ஆகவே இந்த சினிமா துறையில் இருக்கும் கலைஞர்களையோ அல்லது அல்லது பணம் போட்ட தயாரிப்பாளரையோ வாழ வைப்பது என்றால் அவர்களது கலைக்கு மதிப்பளியுங்கள். பெரிய முதலீட்டு படமோ அல்லது சிறிய முதலீட்டு படமோ திரைக்கு வந்தால் அந்த படத்திற்கான உங்களது திரைவிமர்சனத்தை ஒன்று அல்லது இரண்டு வாரம் கழித்து பதிவிடுங்கள். இருந்தும் முன்னரே அந்த படத்தை விமர்சனம் செய்ய போகின்றீர்கள் என்றால் அந்த திரை படத்தின் கதையை வெளியிடதிர்கள் (மேலோட்டமான விமர்சனம் செய்யுங்கள் ). இப்படி செய்வதன் மூலம் மக்களை சுதந்திரமாக திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ஆவலைத்துண்டலாம் , அதோடு அந்தப்படம் வெற்றிப்படமாகவோ அல்லது வசுல் ரீதியான படமாகவோ மாற்ற வழிவகுக்கலாம். புதிதாக வெளிவரும் திரைப்படம் சிறந்ததோ அல்லது மொக்கையோ பதியும் விமர்சனத்தை நேர்மை தன்மை உள்ளதாகவும் எந்தப்பக்கமும் சாராத நடுநிலை விமர்சனத்தை கொடுங்கள். இவ்வாறு செய்தாலே நல்ல உலக தரத்திலான சினிமா (கலை) நமக்கு தொடர்ந்து கிடைக்கும், அதோடு சிறந்த  கலைஞனையும், நல்ல தயாரிப்பாளரையும் நிலைத்து சினிமாவுக்கு பங்களிப்பு செய்ய வைக்க முடியும்.       


நன்றி 

No comments :

Post a Comment