e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

சோழர் சரித்திர காவிய நாயகன் பொன்னியின் செல்வன்

2 comments
பல தமிழ் நாவல்களில் சோழர் காலத்து சரித்திரங்களையும் அதனோடு பிண்ணிப்பிணைந்த கதைகளையும் வாசகர்கள் படித்திருப்பார்கள். கல்கி அவர்களால் எழுதப்பட்ட மிகப்பிரபல்யம் ஆன நாவல்களில் முக்கியமான ஒரு நாவல் பொன்னியின் செல்வன். சோழர் மகோன்னத காலத்தில் நடந்த சம்பவங்களை சுவையாக விபரிக்கும் அற்புத காவியம். பலர் இந்த நாவலை படித்தும், கேட்டும், உணர்ந்தும் இருப்பார்கள். நானும் பல காலங்களாய் இந்த அரிய நாவலைப்பற்றிய பலர் கருத்துக்களை மட்டுமே கேட்டு வந்தேன். அதன் தூண்டுதலில் எப்படியாவது பொன்னியின் செல்வன் காவியத்தை படிக்கவேண்டும் என்ற ஆவல் தூண்டி இழுக்க, இணையத்தில் தேடி ஒரு பெரும் காவியத்தை படித்து முடித்தேன். அதன் விளைவாக எனது அனுபவத்தை விபரிக்கவும், இன்னமும் இந்த நாவலை படிக்காமல் இருப்பவர்களுக்கும் பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் பற்றி கூறவும் என் மனம் பேராவல் கொண்டு இந்த பதிவை இடுகின்றேன்.
பொன்னியின் செல்வன் தமிழ் நாவல் மொத்தம் 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அவை பின் வருமாறு 

பாகம் 1 - புதுவெள்ளம், பாகம் 2 - சுழல்காற்று, பாகம் 3 - கொலைவாள், பாகம் 4 - மணிமகுடம், பாகம் 5 - தியாக சிகரம்

பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள மொத்தம் 5 பாகங்களையும் அலங்கரிக்கும் கதாப்பாத்திரங்கள்



சுந்தர சோழர் , ஆதித்திய கரிகாலன், அருண்மொழிவர்மன் (பிற் காலத்தில் ராஜ ராஜ சோழன்), குந்தவை, வந்திய தேவன், ஆழ்வார்க்கடியான், கந்தமாறன், வானதி, மணிமேகலை, குழந்தை சோதிடர், நந்தினி, செம்பியன் மாதேவி, பூங்குழலி, மந்தாகினி, வாணி, அனிருத்த பிரம்மராயர், பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், சம்பூரையர், மலையமான், சேந்தன் அமுதன், கருத்திருமன், பார்த்திபேந்திரன், பினாகபாணி, ரவிதாசன், சோமன் சாம்பவன், மதுரந்தன், ரகுதாசன், இன்னும் பலர். 

பொதுவாக சரித்திர நாவல்களை படிக்கும் போது கொஞ்சம் அலுப்பு தட்டுவது வழமை ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க படிக்க ஆர்வமும் வியப்பும் என்னை திண்டாட வைத்து விட்டன. இந்த 5 பாகங்களிலும்  வாணர் குலத்து வல்லவரையன் வந்திய தேவன் நிரம்பி நிற்கின்றான். அவனே இந்த பெரும் சரித்திரக்கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்கின்றான். அதோடு இன் நாவலில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பு மற்றும் கதைக்கு ஏற்றால் போல் அப் பாத்திரங்களின் கையாளுகை எழுத்தாளர் கல்கிக்கே உரிய தனிப்பாணி. சுருக்கமாக சோழர் சரித்திரத்தை பொன்னியின் செல்வன் நாவல் மூலம் கொஞ்சம் புரட்டி பார்ப்போம். 

இற்றைக்கு 1100 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சோழர் ஆட்சி காலப்பகுதியில் கதை ஆரம்பிக்கின்றது. விஜயாய சோழன் இரண்டாவது சோழ சாம்ராஜ்யத்துக்கு வழி கோலினான். பின்னர் 980 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தர சோழர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். இவர் ஆட்சி காலத்தில் சோழ சாம்ராஜ்யம் நாலா திசையிலும் பரவியிருந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்திற்க்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றுருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் பட்டத்தில் இருந்த கண்டராதித்தர் சிவப்பக்தியில் திளைத்ததால் ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. கண்டராதித்தருக்கு பின்னர் பட்டத்திக்கு வந்த அவரின் சகோதரர் அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலம் பதவிவகித்து மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் ஆட்சி பொறுப்பை அரிஞ்சயர் புதல்வர் சுந்தர சோழர் ஏற்றுக்கொண்டார்.   

சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் தென் திசைக்கு படை எடுத்து சென்று பாண்டிய படையுடன் போர் புரிந்தார். அச் சமயத்தில் மதுரையில் வீர பாண்டிய மன்னன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். வீர பாண்டியனுக்கு உதவுவதற்காக சிங்கள மன்னன் மகிந்தன் இலங்கையில் இருந்து  ஒரு படையை மதுரைக்கு அனுப்பி வைத்தான். சேவூர் என்னும் இடத்தில் பாண்டிய படையையும், மகிந்தன் படையையும் சோழர் படைகள் போரிட்டு வெற்றி கொண்டன. வீர பாண்டியன் படையிழந்து, முடியிழந்து ஓடித்தப்பித்தான்.பாண்டிய மன்னனுக்கு படை உதவி வழங்கிய  மகிந்தனுக்கு பாடம் புகட்டும் நோக்கில் சுந்தர சோழர் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினார். எதிர் பாராத விதமாக சோழர் படை மகிந்தனிடம் தோல்வியடைய வேண்டி வந்தது. இதை கேள்வியுற்ற வீர பாண்டிய மன்னன் மீண்டும் சோழர் படையுடம் மோதி சுந்தர சோழர் மூத்த புதல்வர் ஆதித்த கரிகாலர் கையால் தலை இழந்து உயிர் துறந்தான். அதன் பின் பாண்டிய நாடு சோழர் சாம்ராஜ்யத்தில் ஐக்கியம் ஆனது. வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகாலன் சோழர் சாம்ராஜ்யாத்தின் இளவரசராக ஆக பட்டம் சூட்டப்பெற்றார். அச் சரித்திர சம்பவத்திற்கு பின்னர் ஆதித்த கரிகாலர் வடக்கே சென்று தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இரட்டை மண்டல படையை முறியடித்து காஞ்சி நகரை சோழர் வசம் கொண்டு வந்து அங்கேயே தங்கி பொன்மாளிகை ஒன்றை கட்டிக்கொண்டிடுந்தார்.


எனினும் சிங்கள மன்னன் மகிந்தனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற விருப்பம் சுந்தர சோழர் மற்றும் தளபதிகளிடம் இருந்தது. தயாரான நிலையில் இருந்த பெரிய படையை  தலைமை வகித்து செல்ல சுந்தர சோழர் இளைய மகன் அருண்மொழிவர்மன் முன் வந்தார்.அவன் அன்பிற்க்கு பாத்திரம் உடைய  தன் தமக்கையாகிய குந்தவையின் ஆசியுடன் பெரும் சோழப்படையுடன் இலங்கை புறப்பட்டு சென்றான். 

அரசு பட்டத்துக்கு வருவதற்கு முன்னர் சுந்தர சோழர் தன் இளமை பருவத்தில்  ஒரு தீவில் ஊமை பெண்ணான மந்தாகினி என்பவளுடன் வாழ்க்கை நடத்தியிருந்தார். பின்னர் அவளை கைவிட்டு சோழ நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்தார். அவளுக்கு செய்த துரோக  குற்ற உணர்வு அவரை வாட்டியது. ஏற்கனவே பாரிசவாதத்தால் தாக்கப்பட்டு இருந்தவர் இன்னமும் தளர்ந்து படுத்த படுக்கையானார். பின்னர் காலம் காலமாக சோழர் சாம்ராஜ்யம் உருவாக பாடுபட்ட பழுவேட்டரையர்கள் சுந்தர சோழர் அனுமதியுடன் முக்கிய பதவிகள் வகித்தனர். பெரிய பழுவேட்டரையர் சோழ நாட்டு தனாதிபதி, தானியாதிகாரி, இறைவிதிக்கும் பொறுப்பிலும், அவரின் சகோதரர் சின்ன பழுவேட்டரையர் தஞ்சை கோட்டை காவல் அதிகாரியாகவும் பதவி வகித்தனர். இவர்களையும்,  இவர்களின் ஆட்சியும் சோழ மக்களுக்கு அவ்வளவாக பிடித்திருக்க வில்லை. 


இன் நிலையில் காஞ்சியில் தங்கியிருந்த ஆதித்த கரிகாலர் தன் நெருங்கிய நண்பனான வாணர் குலத்து வந்திய தேவனிடம் ரகசிய ஓலைகள் இரண்டை கொடுத்து ஒன்றை தஞ்சையில் நோய் வாய் பட்டு கிடந்த தன் தந்தை சுந்தர சோழரிடமும் இன்னுமொன்றை பழையாறையில் உள்ள தன் தங்கை குந்தவையிடமும் கொடுக்கும்படி அனுப்பி வைக்கின்றார். முதலில் தஞ்சைக்கு ஓலையை கொண்டுவரும் வந்திய தேவன் வழியில் வைஷ்ணவ நம்பியான ஆழ்வார்க்கடியானை சந்திக்கின்றான். பின்னர் வந்திய தேவன் தன் நெருங்கிய சிநேகிதனான கந்தமாறன்  அழைப்பின் பெயரில் அவன் கடம்பூர் சம்பூர் அரண்மனைக்கு சென்று அங்கே சந்தர்ப்ப வசமாக அன்று இரவு நடந்த சதியாலோசனையைப்பற்றி அறிந்து கொள்கின்றான். மறுநாள் தஞ்சைக்கு பயணப்படும் வந்திய தேவன் வழியில் சேந்தன் அமுதன் என்பவனின் நட்பை பெறுகின்றான். அவன் மூலமாக சின்ன பழுவேட்டரையரின் பொறுப்பில் கடும் காவலில் இருக்கும் தஞ்சை கோட்டை  பற்றி அறிந்து கொள்கின்றான். அதிஷ்ட வசமாக பெரிய பழுவேட்டரையரின் அழகிய புதிய மனைவியான நந்தினியை வழியில் சந்தித்து தஞ்சை கோட்டைக்குள் நுழைவதற்கான பனை இலட்சனை பொதித்த மோதிரம் ஒன்றை வந்திய தேவன் பெற்றுக்கொள்கின்றான். மறு நாள் தஞ்சை கோட்டை காவல் பொறுப்பில் இருக்கும் சின்ன பழுவேட்டரையரிடம் தான் சுந்தர சோழருக்கு ஓலை கொண்டுவந்திருப்பதாகவும், பெரிய பழுவேட்டரையரை சம்பூர் மாளிகையில் சந்தித்தாகவும், அவரிடம் இருந்தே  பனை இலட்சனை பதித்த மோதிரத்தை பெற்றதாகவும் சின்ன பழுவேட்டரையரிடம் பொய் கூறி சுந்தர சோழரிடம் ஓலையை கொடுக்கின்றான் வந்திய தேவன். அந்த ஓலையில் ஆதித்த கரிகாலர் இவ்வாறு எழுதியிருந்தார். "தான் புதிதாக காஞ்சியில் கட்டியுள்ள பொன்மாளிகையில் வந்து தங்கியிருக்கவும்". பின்னர் வந்திய தேவன் சுந்தர சோழரிடம் ரகசியமாக தங்கள் உயிருக்கு கோட்டைக்குள் ஆபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறிவிட்டு திரும்புகின்றான்.பின்னர் சின்ன பழுவேட்டரையரின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து கோட்டையில் நந்தினியை சந்திக்கின்றான். அவள் வந்திய தேவனை தன வலையில் விழ பல்வேறு ஆசைகளை அவனுக்கு தூண்டுகின்றாள். அச் சமயம் நந்தினியை சந்திக்க வந்த மந்திரவாதி ரவிதாசனை மறைவான இடத்தில் இருந்து பார்த்துவிடுகின்றான் வந்திய தேவன்.அதே சமயம் சம்பூரில் இருந்து திரும்பிய பெரிய பழுவேட்டரையரிடம்  இருந்து உண்மையை அறிந்து கொண்ட சின்ன பழுவேட்டரையர் தன்னை ஏமாற்றிய ஒற்றன் வந்திய தேவனை எங்கு கண்டாலும் கைது செய்யுமாறு காவலாளிகளுக்கு கட்டளை இடுகின்றான்.


ரவிதாசன் மற்றும் நந்தினியை பார்க்கவரும் பெரிய பழுவேட்டரையர் ஆகியோரிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அருகில் இருந்த நிலவறையில் ஒளிந்து கொள்கின்றான் வந்திய தேவன். நிலவறையின் அடர்ந்த இருட்டில் தற்செயலாக  கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட கந்தமாறனை தூக்கிச்சென்று சேந்தன் அமுதன் தாயாரிடம் ஒப்படைத்து அவனை குணப்படுத்துமாறு சொல்லிவிட்டு குந்தவையை சந்தித்து ஓலை கொடுக்க சேந்தன் அமுதனுடன் பழையாறை செல்கின்றான். வழியில் சின்ன பழுவேட்டரையரின் காவலாளிகளிடம் சேந்தன் அமுதன் மாட்டி கொள்ள, வந்திய தேவன் தப்பித்து குந்தவையை சந்திக்கின்றான்.


பார்த்த மறு கணத்திலேயே இருவரும் காதல் கொள்கின்றனர். குந்தவையிடம் பெரிய பழுவேட்டரையர் அவரது இளம் மனைவி நந்தினி தேவியின் தூண்டுதலில் சுந்தர சோழர் பெரியப்பா (கண்டராதித்தர் ) மகன் மதுராந்தக தேவரே அடுத்த சோழ சக்கரவர்த்தியாக வேண்டும் என்று சதியாலோசனைகளில் ஈடுபடுவதாகவும்.  ஆதரவு பெருகும் பொருட்டு அவர்கள் அண்டைய நாட்டு சிற்றரசர்களை திரட்டும் விஷயத்தை சொல்கின்றான். மதுராந்தகனோ தன் அன்னை செம்பியன் மாதேவியால் சிவநேச செல்வனாக வளர்க்கப்பட்டவன். சிற்றரசர்கள் மதுராந்த தேவரின் மனதை குழப்பி அவனுக்கு நாடாளும் ஆசையை ஏற்படுத்திவிட்டதையும் கூறினான். உடனே குந்தவை பழுவேட்டரையர்கள் அறியாவண்ணம் வந்திய தேவனை   ஈழத்திற்கு அனுப்பி அங்கே போர் முனையில் நிற்க்கும் அருண்மொழிவருமானை உடனே அழைத்து வரும்படி ஒரு ஓலை ஒன்றை கொடுத்து அனுப்புகின்றாள்.

அச் சமயம் அதித்த கரிகாலன் சம்பூர் அரண்மனையில் நடந்த சதியாலோசனை பற்றி அறிந்து கொள்கின்றான். தனது நம்பிக்கைக்கு பாத்திரமான   பார்த்திபேந்திரனை ஈழம் சென்று அருண்மொழிவருமானை கஞ்சிக்கு உடனே அழைத்து வரும்படி கட்டளை இடுகின்றான். மறு நாளே பெரிய கப்பலில் அருண்மொழிவருமானை அழைத்து வர பார்த்திபேந்திரன் ஈழம் புறப்படுகின்றான்.


சேந்தன் அமுதனின் காதலி பூங்குழலி என்கின்ற ஓடக்கார பெண்ணின் உதவியுடம் கடலில் பல இடர்களை தாண்டி ஈழம் செல்கின்றான் வந்திய தேவன். அங்கே அருண்மொழிவர்மனை சந்தித்து குந்தவை கொடுத்த ஓலையை கொடுக்கின்றான் வந்திய தேவன். அருள்மொழிவர்மனையும் வந்திய தேவனையும் சில ஆபத்தில் இருந்து காப்பாற்றுகின்றாள் ஊமை பெண் மந்தாகினி. அச்சமயம் சுந்தர சோழர் கட்டளைப்படி  பழுவேட்டரையர்கள் அருண்மொழிவருமரை சிறைபடுத்த இரு கப்பல்களை அனுப்பியிருக்கும் செய்தியை பூங்குழலி தெரிவிக்கின்றாள். உடனே அருண்மொழிவர்மர் தான் பழுவேட்டரையர் தன்னை சிறை படுத்த அனுப்பிய கப்பல் தரித்து நிற்க்கும் இடத்தில் சென்று சரணடைய யானை மீது ஏறி பூங்குழலியுடன் சென்றுவிடுகின்றார். அங்கே ஒரு கப்பல் சேதமடைந்து கரை ஒதுங்கி  கிடப்பதை கண்டு வியக்கின்றனர்.அருண்மொழிவருமனை பழுவேட்டரையரின் ஆட்களிடம் இருந்து காப்பாற்றும் நோக்கில் பார்த்திபேந்திரன் வந்த கப்பலில் செல்கின்றனர் வந்திய தேவன் மற்றும் சோழ தளபதிகள். கடலில் பழுவேட்டரையரின் மற்றைய கப்பல் செல்வதை கண்ட வந்திய தேவன் சிறைபட்டிருக்கும் அருண்மொழிவர் அதில் செல்வதாக தவறாக நினைத்து கடலில் குதித்து அந்த கப்பலில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளிடம் மாட்டிக்கொண்டு விடுகின்றான். இதை அறிந்த அருண்மொழிவர்மர் தன் நண்பனை காப்பாற்ற நினைத்து அங்கு வந்த பார்த்திபேந்திரன் கப்பலில் புறப்படுகின்றார். நடுக்கடலில் புயல் காற்றில் இரு கப்பல்களும் அகப்பட்டுக்கொள்கின்றது. வந்திய தேவன் சென்ற கப்பலை எரித்துவிட்டு பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் தப்பிக்கின்றன. கப்பல் எரிவதை பார்த்த அருண்மொழிவர்மர் அடிக்கும் புயல் காற்றையும் பொருள் படுத்தாமல் கடலில் குத்தித்து வந்திய தேவனை காப்பாற்றுகின்றார். எனினும் கடலில் தத்தளித்த இருவரையும் பூங்குழலி ஓடத்தில் ஏற்றி கரை ஏற்றுகின்றாள்.

கடலில் குதித்த அருண்மொழிவர்மர் இறந்து விட்டதாக மற்றயவர்கள் ஊகித்து கவலை அடைகின்றனர். சோழ நாடெங்கும் செய்து தீ போல பரவுகின்றது. இந்நிலையில் அருண்மொழிவர்மர் கொடிய காயிச்சலில் பாதிக்கப்பட்டு புத்த பிட்சுவிடம் சிகிற்சை பெற்றுவருகின்றார். குந்தவியை பழையறையில் சந்தித்த வந்திய தேவன் அருண்மொழிவர்மர் உயிரோடு இருப்பதாகவும்,அங்கே ஊமை பெண் மந்தாகினியை கண்டதாகவும் அவளுக்கும், நந்தினிக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்து வியந்ததாகவும் கூறினான். ஊமை பெண் மந்தாகினிக்கும், சுந்தர சோழருக்கும் பிறந்தவளே நந்தினி என்று குந்தவை ஊகித்தால். இந்த சமயத்தில் மந்தாகினியை சுந்தர சோழர் சந்திக்க ஏற்ப்பாடுகள் செய்தாள் குந்தவை.

நந்தினி குழந்தை பருவத்தில் பழையாறை ஆலயபட்டார் வீட்டில் வளர்ந்தவள். ஆதித்திய கரிகாலர் நந்தினியிடம் ஈடுபாடு கொள்வது உணர்ந்து செம்பியன் மாதேவி நந்தினியை பாண்டிய நாட்டிற்கு அனுப்பிவிட அங்கு வீர பாண்டியனிடம் அன்பு கொண்டாள். சில காலத்திற்கு பின்னர் ஆதித்திய கரிகாலர் வீர பாண்டியனின் தலையை துண்டித்துவிட, ஆதித்திய கரிகாலரை பலி வாங்கும் நோக்கத்தில் பெரிய பழுவேட்டரையரை மணந்து சிற்றரசர்களையும் சதிதிட்டத்தையும் ஊக்குவித்தாள். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ஆன ரவிதாசன், ரகுதாசன், சோமன் சாம்பவன் முதலானோர் நந்தினியுடன் சேர்ந்து சோழர் சாம்ராஜ்யத்தை அடியோடு அழித்து மீண்டும் பாண்டிய ராட்சியத்தை ஸ்தாபிக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர்.

இந்த சமயத்தில் வீர பாண்டியன் ஆபத்துதவிகளினால் உச்ச கட்ட சதித்திட்டமாக ஒரே நாளில் (வெள்ளி அன்று) சுந்தர சோழர், ஆதித்திய கரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மன் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். ஆனால் எப்படியோ அருண்மொழிவர்மன் சதியில் இருந்து தப்பித்து தஞ்சையை அடைகின்றார். சுந்தர சோழருக்கு வைத்த குறியை தான் ஏற்றுக்கொண்டு உயிர்த்தியாகம் செய்தாள் மந்தாகினி.

இந்நிலையில் நந்தினியை சந்திக்க ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்பூரையர் அரண்மனைக்கு போய்க்கொண்டிருந்தான். அவனுக்கு அவள் மேல் இருந்த மோகத்தால் ஏற்ப்படக்கூடிய அசம்பாவங்களை தடுப்பதற்காக இலங்கையில் இருந்து திரும்பிய வந்திய தேவனுக்கு ஆதித்த கரிகாலனை காப்பாற்றும் படி கட்டளை ஈட்டு அனுப்பினாள் குந்தவை. சம்பூரில் நந்தினியை வந்திய தேவன் சந்தித்து அவளுக்கும், ஆதித்த கரிகாலனுக்குமான உறவை விபரிக்கின்றான். மந்தாகினியே அவளது அன்னை என்றும், சுத்தர சோழர் அவளது தந்தை என்றும் தெளிவுபட கூறுகின்றான். இதை அனைத்தையும் கேட்ட நந்தினி மனம் மாறுகின்றாள்.

கடம்பூர் சம்பூரையர் மாளிகையில் இருந்த ஆதித்த கரிகாலனை காப்பாற்ற வந்திய தேவனும்,ஆவனுடன் காதல் கொண்ட சம்பூரையர் மகள் மணிமேகலையும் முயன்றார்கள்.  ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. கரிகாலனை கொண்டது யார் என்று சரியாக தெரியா வேளை கொலைப்பழி வந்திய தேவன் மீதும் விழுந்தது.

சோழநாட்டு முதல் மந்திரி அனிருத்த பிரம்மராயர், இவருடைய சீடன் ஒற்றன் ஆழ்வார்கடியான். பெரிய பழுவேட்டரையர் தான் நந்தினியின் பெயரில் சந்தேகம் கொண்டு அவளை கொல்ல நினைத்து தவறுதலாக ஆதித்த கரிகாலரை கொன்றார் என்று இவர்கள் எண்ணினார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று குழப்பமாகவே இருந்தது. 

நந்தினி குதிரை ஏறி சோழ நாட்டை விட்டே வெளியேறினாள். பின்னர் திரும்பவே இல்லை. ஆதித்ய கரிகாலன் மரணம் சோழ நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது. மக்கள் அனைவரும் அடுத்து அருண்மொழிவர்மரே பட்டத்துக்கு வர வேண்டும் என்று விரும்பினர். அருண்மொழிவர்மனின் தாய்வழிப்பாட்டனார் மலையமானும், அவர் மேல் காதல் கொண்டிருந்த கொடும்பாளூர் வானதியின் இனத்தவரும் அருண்மொழியை ஆதரித்தனர்.    

ஆனால் மதுராந்தக தேவனுக்கு தான் சிம்மாசனம் ஏற வேண்டும் என்று ஆசை. அப்போது தான் செம்பியன் மாதேவியும், அனிருத்த பிரம்மராயரும் மதுராந்தகன் பிறப்பை பற்றிய உண்மையை கூறினார்கள். மதுராந்தகன் செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளை அல்ல, குலப்பெருமை அற்ற ஊமை பெண்ணான வாணிக்கு (சேந்தன் அமுதனனின் தாய்) பிறந்தவனே அவன் என்பதே அந்த உண்மை. எதேச்சையாக அங்கு வரும் அருண்மொழிவர்மன் தமக்கும், குந்தவைக்கும் கூட ஈழ நாட்டு ஒரு ஊமை பெண் மூலமாக அந்த உண்மை தெரியும் என்றும், மதுராந்தகரே ஆட்சி பொறுப்பை ஏற்க்கட்டும் தமக்கு அது வேண்டாம் என்று கூறுகின்றான்.    

கொலைப்பழி சுமத்தப்பட்டு பாதாள அறையில் அடைக்கப்பட்டிருக்கும் வந்திய தேவனை பற்றிய வருத்தமும், குழப்பமும் குந்தவையை வாட்டுகின்றன. ஆனால் வந்திய தேவன் சிறையில் இருந்து தப்பிக்கின்றான். செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் சேந்தன் அமுதன் தான் என்ற உண்மை மதுராந்தனுக்கு தெரிய வர. அவன் பினாகபாணியை ஏவி சேந்தன் அமுதனை கொலை செய்யும்படி கட்டளை இடுகின்றான். பினாகபாணி சேந்தன் அமுதனை கொலை செய்ய குறி பார்க்கும் வேளை வந்திய தேவன் குறுக்கே பாய்ந்து சேந்தன் அமுதனை காப்பற்றுகின்றான். பின்னர் அரசாட்சியில் பற்று இல்லாத சேந்தன் அமுதனும்,பூங்குழலியும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதோடு குந்தவையின் விருப்பத்திற்கு ஏற்ப  அருண்மொழிவ்ருமனும், வானதியும் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.  பின்னர் பட்டம் சூட்டப்பெற்ற அருண்மொழிவர்மர் தன் கையால் சேந்தன் அமுதனுக்கு பட்டம் சூட்டி அண்டைய நாடுகளை கைப்பற்ற முனைகின்றான். 

இது சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் நடந்த சரித்திர நிகழ்வுகள். இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வன் நாவல் பிண்ணப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு இந்த பெரிய நாவலை கொஞ்சமாக  முடிந்தளவு சுருக்கி தந்துள்ளேன். ஏதும் குறைகள் இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி                                                         

2 comments :


  1. பழுவேட்டரையர்கள்



    நா. முரளி நாயக்கர், சென்னை-44



    பழுவேட்டரைய அரசர்கள் பிற்கால சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.


    பழுவேட்டரையர்களை "கேரள அரசர்கள்" என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர். (1 & 2).


    சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் "மழவர்குடியை" சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.(3) பழுவேட்டரையர்களும் தங்களை "மழவர்" ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று மழவர் கொங்கணி சென்னி நம்பி என்பாரைக் கீழபழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.(4) அது :


    "பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
    மாமடிகள் மழவர் கொங்கணி
    செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று"


    பிற்கால சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை "சேரர்குடியை" சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை "கேரள அரசர்கள்" என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.(5) அது :


    "ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா"

    "ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி"


    கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடூர் அதியரையன்" (தகடதரையன்) என்றும் அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் "வன்னிய மரபினர்" என்று பெறப்படுகிறது.


    பழுவேட்டரையர்களும் தங்களை "கேரள அரசர்கள்" என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் "மழவர் குடியை" சார்ந்த "சேர குல வன்னியர்கள்" என்று நிறுவப்படுகிறது. "சேரர்கள்" அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.


    "கேரள அரசர்கள்" என்பதும் "சேர அரசர்கள்" என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.(7)


    பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த "சேரமானாரின்" கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் "கொல்லிப்பெரியான்" என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் "சேரமானாரின்" மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.(8)


    சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் "கொல்லிப்பெரியான்" (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் "மழவர் குடியை" சார்ந்த "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதும் தெரியவருகிறது.


    டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த "அரியலூர் மழவராயர்களே", "மழவர் குடி" வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.


    பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த "வன்னிச் செய்" என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.(9)


    பழுவேட்டரையர்கள் "வன்னியர்கள்" என்பதால்தான் "வன்னிச் செய்" என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர்.



    அடிக்குறிப்புகள் :


    (1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8.

    (He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala)


    (Cont'd......)

    ReplyDelete
  2. Paluvettaraiyar article : Foot notes (Cont'd.....) :



    (2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12.

    (Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala
    Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya (Ep.Ind. Vol-XV, P-50). By "Kerala Prince" should be meant a relation of the Chera King).


    (3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா,மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006.


    (4) S.I.I. Vol-XIX, No.237, page-122.


    (5) S.I.I. Vol-I, No.75, Page-106.


    (6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை,Year-2007.


    (7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a
    descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of
    Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106).


    (8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243.


    (9) S.I.I. Vol-XIX, No.406, page-214.


    -x-x-x-

    ReplyDelete