e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

இணைய உலாவுதலை (Web Browsing ) வேகப்படுத்த OpenDNS அல்லது Google DNS க்கு மாற்றி அமைத்தல்

No comments
உள்ளூர் இணைய சேவைகள் வழங்குனர்களிடம் அனேகமாக அதிவேக DNS (Domain Name System ) Servers இருப்பது இல்லை. இந்நிலைமை நீங்கள் இணைய வலை பக்கங்களை பார்ப்பதற்க்கான இணைய உலாவுதலை (Web Browsing ) வேகத்தை குறைத்து விடுகின்றது.  நீங்கள் உங்களது IPV4 செட்டிங்க்ஸ் யை OpenDNS அல்லது Google DNS  க்கு மாற்றி அமைப்பதின் மூலம் உங்களுடைய இணைய உலாவுதலை (Web Browsing ) வேகப்படுத்த முடியும். இவை சர்வதேச DNS (Domain Name System ) Servers வழங்கும் நிறுவனங்கள்.
முதலில் Network status notification icon மேலே ரைட் கிளிக் செய்து அதில் Open Network and Sharing Center என்பதை தெரிவு செய்க.


அதன் பின்னர் இடது பக்கத்தில் காணப்படும் Change adapter settings இணைப்பை அழுத்துங்கள்.    


இனி நீங்கள் DNS செட்டிங்க்ஸ் மாற்ற விரும்பும் நெட்வொர்க் அடப்டெர் (Network adapter ) மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Properties யை தெரிவு செய்க.


அதை தொடர்ந்து தோன்றும் திரையில் உள்ள பட்டியலில் நீங்கள் Internet Protocol Version 4 (TCP/IPV4 ) என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் கிழே காணப்படும்  Properties யை தெரிவு செய்க.


அடுத்து தோன்றும் திரையில் கிழே வழங்கப்பட்டுள்ள ஏதுனும் ஒரு DNS தகவலை கொடுக்கவும்.

Google DNS 

Preferred : 8.8.8.8
Alternate: 8.8.4.4

OpenDNS  

Preferred : 208.67.222.222
Alternate: 208.67.220.220


முடிந்தது இப்போது உங்களது இணைய உலவி வேகத்தை திறந்து பரிசோதித்து பாருங்கள்.
நன்றி 

No comments :

Post a Comment