e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 7 யில் ரௌட்டர் இல்லாமல் wireless நெட்வொர்க் வலையமைப்பை உருவாக்குதல்

No comments
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்க்கு முன்பு, உங்கள் கணணிகளில் வலையமைப்பை இணைப்பதற்கு தேவையான  Wi-Fi device or a wireless network card பொறுத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

PC wireless network card 

USB wireless network card

Wireless PC- card for note book and laptop


இனி கணணியை ஆரம்பித்தவுடன் ஸ்டார்ட் மெனுவை சொடுக்கி, அதில் control panel யில் உள்ள "Network and sharing center" என்பதை தெரிவு செய்க.



பின்னர் தோன்றும் திரையில் "set up a wireless and ad-hoc (computer-to-computer) " என்பதை தெரிவுசெய்யுங்கள். அதன் பின்னர் "Next " யை அழுத்தி தொடருங்கள்.



அதை தொடர்ந்து, உங்கள் கணணிக்கு பயனர் பெயரை தோன்றும் திரையில் கொடுத்தல் வேண்டும். அத்தோடு நீங்கள் உருவாக்கும் வலையமைப்புக்கு கடுமையான பாதுகாப்பு முறையை தெரிவு செய்தல் வேண்டும். அதற்க்காக security type எனும் படிவத்தில் "WAP-2 personal" எனும் பாதுகாப்பு முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் முக்கியமாக security key  எனும் படிவத்தில் கடுமையான பாதுக்காப்பு key யை நீங்கள் கொடுத்து "Next " யை தெரிவு செய்யுங்கள்.



பின்னர் தோன்றும் திரையில் "Turn on Internet connection sharing" கொடுத்து செய்முறையை முடித்துவிடுங்கள். இனி கணணிகளுக்கு இடையே நீங்கள் வலையமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். 



நன்றி.

No comments :

Post a Comment