e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

கமல் என்ற தமிழன் கோடி கோடியாய் சேர்த்த சொத்து அன்பு ஒன்றே

No comments
தமிழ்நாடே இல்லை இல்லை உலகமே அல்லோல கல்லோலப்படுகின்றது ஒரு தமிழ் கலைஞனின் மேல் வைத்த அன்பினால். விஸ்வரூபம் என்ற தலைப்பை எந்த நேரத்தில் கமல் வைத்தாரோ தெரியவில்லை, பிரச்சனையும், எதிர்ப்பும் மாறி மாறி விஸ்வரூபம் எடுக்கின்றது.இப்படியே இது தொடருமே ஆனால் கமல் மேல் பாசமும், பற்றும் கொண்ட கோடிக்கணக்கான உள்ளங்களின் விஸ்வரூபத்தை உலகமே காணவேண்டியிருக்கும். ஆரம்பத்தில் DTH தொழில்நுட்ப பிரச்சனை, அதன் பின்னர் விஸ்வரூபம் திரைபடத்தின் மீதான இஸ்லாமிய அமைப்பின் எதிர்ப்பு, பின்னர் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தடை.

இப்படி எத்தனை துன்பங்களைத்தான் ஒரு மனிதன், கலைஞன்  தனியாக நின்று எதிர்கொள்வது அல்லது அனுபவிப்பது.இருந்த அத்தனை சொத்துக்களையும் தன் திறமை மீதும் ரசிகர்கள் மீதும் நம்பிக்கை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை எடுத்தால், ஆளுக்காள் முந்தானையை விரிச்சி கொண்டு வாருகின்றார்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்க்கு. கமலுக்கு பிரச்சனை ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை நின்று எதிர்கொள்வதற்கு. விக்ரமாதித்தன் கதை போல் குழப்பங்கள் விரிந்தது கொண்டுபோவது கமலுக்கு மட்டும் இன்றி நமக்கும் கவலையாகவே உள்ளது. DTH பிரச்னையும், இஸ்லாமிய அமைப்பின் எதிர்பையும் சமாளித்த கமலுக்கு தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முடிவு புரியாத புதிராகவே உள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதை விட்டு விட்டு ஒரு தனி மனிதனோடு மல்லுக்கு நிற்பது சகிக்கமுடியாமல் இருப்பது சத்தியமே. நேற்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட  அனுமதி அளித்த உயர் நீதிமன்றமே ஆச்சர்யப்பட்டிருக்கும் இன்று விதிக்கப்பட்ட விஸ்வரூபத்தின் மீதான தடைக்கு. அப்படியொரு பிரமிப்பாக உள்ளது, அடுத்து என்ன என்ன பூகம்பத்தை ஆரம்பிக்க உள்ளனரோ தெரியவில்லை.

 ஒரு மனிதன் எந்த அளவுக்கு மனதளவில் பாதிக்கப்பட்டால் தான் பிறந்த மண்ணை விட்டே போகிறேன் என்று கூறுவான். இப்படி ஒரு மாபெரும் கலைஞனை நோகடித்த அத்தனை பேரையும் மனதார வாழ்த்துவதே கமலுக்கு நாம் போடும் அன்பிலான மருந்து. ஜாதி, மதம் வேண்டாம் அன்போன்றே போதும் நாம், நான் வாழ என்று வாழும் கலைஞனின் உணர்ச்சியை சீண்டி பார்த்துவிட்டார்கள்  யார் யாரோ எல்லாம். இது கமலுக்கு மட்டும் ஆனது அல்ல அன்பு என்ற விதை தான் பெரு ஆலவிருட்சத்தை உருவாக்கும் என்று கொள்கையாக வாழும் நமக்குமானதே.கொஞ்சம் தீவிரமாக சிந்தித்து பார்த்தால் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமே தமிழக அரசு போல் தோன்றுவது பெரிதாக வியப்பளிக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய அமைப்பினர் தமிழக அரசின் சூழ்ச்சியில் இப்படி விழுந்த சம்பவம் பொறியில் மாட்டிய எலியாகிப்போனது ஆச்சரியமே. தற்போது உள்ள நிலவரப்படி கமல் பக்கமே ஆதரவு பெருகுகின்றது, அதோடு இனியும் அவரையும், அவர் இயக்கிய படத்திற்கும் இடஞ்சல் கொடுக்கவேண்டாம் என்று வலியுறுத்தி கருத்து  பரிமாறப்படுகின்றது. எல்லோரும் ஆசைப்படுவது தான் இறந்த பின்னர் தன் சாவிற்கு வரும் தலைகளை சேர்க்கவும், பார்க்கவும். இதில் கமல் பெரும் புண்ணியம் செய்திருக்கிறார் போலும், வாழும் போதே தனக்காக எழுந்த, அழுத அத்தனை உணர்ச்சி வசமான தலைகளையும் காண்பதற்கு. இப்படியொரு அறிய வாய்ப்பு கமலுக்கு கிட்டியது இன்று அவர் வீட்டின் முன்பு. 

        
இந்த இனிய வாய்ப்பளித்த எதிர்ப்பாளர்களுக்கும் கமல் கடமைப்பட்டவர் ஆகின்றார், அத்தோடு இத்தனை பேர் அன்பு கையிருப்பாக இருக்க  தனக்கு என இனியொரு சொத்தும் கமல் சேர்க்கவேண்டிய தேவை கிடையாது. இதை விட பெரிய சொத்து நமது பூமியிலேயே இல்லை, அதையே சொத்தாக கொண்ட கமலுக்கு இதை விட வேறு மதம் சார்பற்ற இடம் வாழ்வதற்கு கிடைக்க போவதும் இல்லை. இதுவரைக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் சிறப்பாகவே உள்ளதாக கருத்து தெருவித்து உள்ளார்கள். மேலும் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக அப்படி ஒன்றும் படத்தில் இல்லையே என்றும் இஸ்லாமியர்கள் உட்பட வலுப்பட அமோதித்திருக்கிறார்கள். எனவே தமிழகமே இனி உங்களது அரசியல் சேட்டைகளை ஓரம்கட்டிவைத்து விட்டு ஒரு தமிழன், கலைஞன் வாழ வழி கொடுங்கள். இதற்க்கு மேலும் கமலை கலங்க வைத்தால் தமிழகத்தில் திரையிடப்படாத விஸ்வரூபத்தை நேரில் பார்த்த அனுபவத்தை கமல் அன்பால் சேர்த்த கூட்டம் காட்டிவிடும். எதிர்ப்பவன் மனிதன் என்றால் எதிர்கொள்பவன் மாமனிதன் அவன்தான் கமல்.

நன்றி     

No comments :

Post a Comment