e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

நான் ராவணன் வம்சம்..

No comments
நாற்பது லெட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமி ஒரு உருண்டை வடிவமான சுழலும் வெறும் பாறை. பின்னர் பல லெட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மண், நீர், மலை,பச்சை தாவரங்கள் என இப்போது நாம் வாழும் பூமியாக காட்சியளித்தது. முதல் உயிரினமான மீன் வகையோடு சேர்த்து ஊர்வன, பறவைகள் இறுதியாக மனித இனம் என்று பூவியில் உயிரின விருட்சம் படிப்படியாக தோன்றின.






இப்படி உலக சரித்திரத்திலேயே கடைசியாக முளைத்த மனிதனுக்குத்தான் எத்தனை திமிர் எத்தனை அடாவடித்தனம். அதிலும் மற்ற எல்லா உயிரினங்களை காட்டிலும் மனிதன் சிறப்பு மிக்கவனாக திகழ்ந்ததனால் தானோ என்னவோ நாம் அறியோம். மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் அவனில் உள்ள எல்லா சிறப்பை பார்க்கிலும் முக்கிய அம்சமாக அவனில் விளங்கியது. இந்த அறிவாற்றலால் நாடுகளுக்கு நாடு இனங்களுக்கு இனம் என்று எத்தனையோ பண்டைய இதிகாசங்கள், இலக்கியங்கள், கவிதைகள், கதைகள் என்று வேறுபட்டு அவர்களின் தனித்துவம் மிக்க அடையாளமாக இயற்றப்பட்டன. அப்படி இந்திய (இந்து) மக்களால் போற்றப்படுகின்ற ஒரு இதிகாசம் வால்முகியால் எழுதப்பட்ட ராமாயணம். இதை தமிழில் கம்பர் கம்பராமாயணம் என்று தமிழருக்காக ராமாயணத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்து பாமர மக்களுக்கு இலகுவில் செற்றடைய வழிவகுத்தவர். ராமாயணத்தில் வால்முகி விபரித்த முக்கிய  கதாப்பாத்திரங்களான ராமன், ராவணன் ஆகியோரை கம்பராமாயணத்தில் கம்பர் பெரிய மாற்றங்கள் செய்யமால் கையாண்டுள்ளார்.


இந்த பதிவில் நான் ராமாயணத்தையோ அல்லது கம்பராமாயணத்தை பற்றியோ ஆராய வரவில்லை. இந்த இதிகாசங்களில் என் முப்பாட்டன் இராவணனை எதிர்மறைவான கதாப்பதிரமாக சித்தரித்திருப்பது வரலாறு பிழையாக கருதுகின்றேன். காரணம் வால்முகியின் கற்பனையால் இயற்றப்பட்ட இதிகாசம் காலம் காலமாக எங்கள் தமிழ் வம்சத்திற்கே இழுக்காக அமைந்துவிட்டது. வால்முகியால் சித்தரிக்கப்பட்ட ராமன் கதாப்பாத்திரம் கடவுளாக போற்றப்படும் அளவுக்கு இராவணன் கதாப்பாத்திரம் இழிவாக அரக்கன் போன்று கற்பனை செய்யப்பட்டுள்ளது, இதற்கு கம்பர் துணை போனதும் வேதனைப்படவேண்டிய நிகழ்வாய் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.என்னை பொருத்தவரை  வால்முகியாலும், கம்பராலும் சித்தரிக்கப்பட்ட ராவணன், ராமனை விட நல் ஒழுக்கத்திலும், வீரத்திலும், மக்கள் ஆட்சியிலும், சகோதர பாசத்திலும், இறை பக்தியிலும் பல மடங்கு பெரியவனாகவே தெரிகின்றான். ராமன் தன் ஆட்சி காலத்தில் பதின்னாங்கு ஆண்டுகள் காடு, மலை என்று திரிந்த பொழுதில் எவ்வாறு அயோத்தி நாட்டு மக்கள் எப்படி சிறப்பாக வாழ்ந்திருக்க முடியும்? ஒரு நாட்டின் தலைவனே சரி இல்லை என்றால் அந்நாட்டு தர்மமும், நீதியும் எப்படி காப்பாற்றப்பட்டிருக்கும். மக்கள் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்திருக்க முடியும்? இப்படி கேள்வி மேல் கேள்வி அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் ராவணன் ஆண்ட இலங்காபுரி அவன் ஆட்சி காலத்தில் சிறும் சிறப்புமாக அமைத்திருந்ததாம். மக்கள் எல்லோரும் பிரச்சனைகள் இன்றி சந்தோஷமாக செல்வ செழிப்புடன் வாழ்ந்துள்ளார்கள். அதிலும் ராவாணன் சிவன் மீது பற்று வைத்து, கடும் தவம் புரிந்து வரம் வேறு பெற்றிருக்கின்றான். தன்னுடன் பிறந்த உறவுகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டவனாகவே இருந்திருக்கின்றான்.வீரத்தில் பலம்பொருந்திய இராவணனை, ராமன் பல பேர் உதவியுடன்தான் வீழ்த்தி இருக்கின்றான்.  இப்படி பட்ட ஒரு தலைவனை அரக்கன் போன்று சித்தரித்து, ராமனின் மனைவி மீது ஆசை கொண்டு இலங்கை கடத்தி வந்து விட்டதாகவும் அவன் மீது பழி சுமத்துகின்றனர். ராமன் சீதையை மீட்பதற்க்காக இலங்கா புரி சென்றி ராவணனுடன் போரில் வென்று சீதையுடன் அயோத்தி திரும்புகின்றான். கடவுள் அம்சமான ராமனே சீதையின்  கற்பின் மீது சந்தேகப்பட்டு அவள் மனம் புண்படும் படி செய்கின்றான். ஆனால் ராவணனோ கடத்திவந்த சீதையின் விருப்பம் இன்றி அவளை தொடமறுக்கின்றான். சீதையை தன் ஆசைக்கு இணங்க வைக்க எத்தனையோ வேஷம் ஈட்டு செல்கின்றான். ஆனால் அவள் அவன் வலையில் விழுவதாக இல்லை. அப்போது ராவணன் தம்பி சொல்கின்றான் அண்ணா நீ என்ன வேஷம் போட்டு போனாலும் சீதையின் மனதை உன்னால் மாற்ற முடியாது. ஒரு முறையாவது ராமன் வேஷம் ஈட்டு செல் அவள் கட்டாயம் மனம் மாறுவாள் என்கின்றான். அப்போது ராவணன், தம்பி உனக்கு வந்த இந்த யோசனை எனக்கு வராமல் இல்லை, என்னால் ராமன் வேஷம் போட்டவுடன் ஒரு பெண்ணை கூட தப்பாக நினைத்து பார்க்க முடியவில்லை என்று சொல்கின்றான். கணவரே உலகம் என்று வாழும் சீதையின் நடத்தை மேல் சந்தேகப்பட்ட ராமன் சிறந்தவனா அல்லது சீதையின் விருப்பத்திற்காக காத்திருந்தவன் சிறந்தவனா. ராமனிடம் எவ்வளவோ நல்ல பண்புகள் இருந்தாலும் என்னை பொருத்தவரை ராமனை விட ராவணனே பல மடங்கு சிறந்தவன். அதனால் தான் என் மார்பு தட்டி சொல்வேன் நான் ராவணன் வம்சம் என்று.                

நன்றி         

No comments :

Post a Comment