e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்க்ரீனை (Start Screen) தனிபயனாக்குதல் (Customize) வகைகள்

No comments
இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் ஆனது முந்தய விண்டோஸ் (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 ) ஒபெரடிங் சிஸ்டங்களை விட கவர்ச்சிகரமாக ஆப்பிள் ஒபெரடிங் சிஸ்டத்துக்கு நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 யை பல பற்றி பயனர்கள் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக தெரிவித்தாலும், சிலர் விண்டோஸ் 8 OS பயன்படுத்துவதற்கு கடினமாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் விண்டோஸ் 8 யில் காணப்படும் ஸ்டார்ட் ஸ்க்ரீன் முற்றிலும் மாறுபட்டதாகவும், பல வசதிகளை இலகுவாக பயன்படுத்த கூடியவாரு ஒரே திரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய பதிவில், விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்க்ரீனை எத்தனை வகைகளில் தனிப்பயனாக்குவது (Customize) என்று பார்ப்போம். 

ஸ்டார்ட் ஸ்க்ரீனில் Background மற்றும் நிறங்களை மாற்றுதல்

விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை கணணியில் நிறுவிய பின்னர், விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்க்ரீன் ஆனது எப்பொழுதும் நீலம்-பெப்பேல் (Blue-Purple) ஆலும் Background ஆனது Sparse ஆகவே காணப்படும். இவற்றை எவ்வாறு நீங்கள் விரும்பும் வடிவமைப்பில் மாற்றிக்கொள்வது. இதற்கு உங்களது மௌஸ்யை (Mouse) ஸ்க்ரீனில் மேல் பக்கத்திலோ அல்லது கிழ் பக்கத்திலோ உள்ள மூலையில் அசைத்து, அல்லது Winkey + C யை அழுத்தி Settings என்பதை தெரிவு செய்து அதில் Change PC Settings என்பதை அழுத்துங்கள்.


பின்னர் தோன்றும் திரையில், இடது பக்கமாக உள்ள Personalize என்ற வகையை என்பதை கிளிக் செய்து பின்னர் வலது பக்கமாக மேலே காணப்படும் ஸ்டார்ட் ஸ்க்ரீனை (Start Screen ) அழுத்துங்கள். அதை தொடர்ந்து நீங்கள் விரும்பும்  Background படத்தையோ அல்லது நிறங்களையோ தெரிவு செய்யுங்கள்.  



Tiles அளவை மாற்றுதல் (Resize)

விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்க்ரீனில் காணப்படும் Tiles யின் அளவுகளை மாற்ற விரும்பினால், மாற்ற விரும்பும் Tiles மீது ரைட் கிளிக் செய்யுங்கள். பின்னர் கிழே உள்ள Larger அல்லது Smaller என்பதை பயன்படுத்துவதன் மூலம் Tiles அளவுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.  



லைவ் (Live) Tiles யை இயக்குதலும் முடக்குதலும் (Enable & Disable)

ஸ்டார்ட் ஸ்க்ரீனில் காணப்படும் Tiles யை இயக்குதலும் முடக்குதலும் வசதி தேவைப்பட்டால் அதன்  மீது ரைட் கிளிக் செய்யுது Turn live title off  என்பதை தெரிவு செய்க



Tiles யை தனித்தனி குரூப்பாக ஒழுங்குபடுத்தல் 

ஸ்டார்ட் ஸ்க்ரீனில் காணப்படும் applications யை ஒவ்வொரு தனிக் குரூப்பாக ஒழுங்குபடுத்துவதற்கு Tiles யை மௌசால் இழுத்து விரும்பும் குரூப்பில் போட்டுவிடுங்கள். குறித்த குரூப்க்கு பெயர் அமைப்பதற்கு ரைட் கிளிக் செய்து கிழே காணப்படும் Name Group என்பதை கிளிக் செய்து, குரூப் பெயரை குறிக்க .



ஒவ்வொரு குரூப்பும் (Application, Tiles, Short cuts ) தனித்தனி பெயருடன் காணப்படும்.


டெஸ்க்டாப் அப்ளிகேசன் லாஞ்சர் (Desktop Application Launch) உருவாக்குதல்  

உங்களுக்கு ஸ்டார்ட் ஸ்க்ரீனில் Tiles தேவை இல்லை என்றால் ஸ்டார்ட் பொத்தானில் உள்ள Unpin யை கிளிக் செய்து Tiles யை நீக்கிகொள்ளுங்கள்.


Applications முழுவதையும் திரையில் அமைப்பதற்கு ஸ்டார்ட் ஸ்க்ரீனில் ரைட் கிளிக் செய்து அங்கே All App என்பதை கிளிக் செய்யுங்கள்.


கோப்புக்களையும் இணைய தளங்களையும் Pin பண்ணுதல்

ஸ்டார்ட் ஸ்க்ரீனில் நீங்கள் ஷர்ட் கட்டாக கோப்புக்களை அமைக்க File Explore விண்டோவில் ரைட் கிளிக் செய்து Pin to start என்பதை தெரிவு செய்க.


அமைத்த கோப்புக்களும் இணைய பக்கங்களும் இப்பொழுது ஸ்டார்ட் ஸ்க்ரீனில் அமைத்த ஷர்ட் கட்டாக தெரியும்.


விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தில் ஸ்டார்ட் ஸ்க்ரீனில் பயன்படுத்தும் வகைகளை இந்த பதிவில் புகை படங்களின் உதவியுடன் பார்த்தோம்.

முன்னைய பதிவு : இலங்கையில் இன்று 65 ஆவது சுதந்திர தினமாம்..

நன்றி 

No comments :

Post a Comment