e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

VHD மூலம் விண்டோஸ் 7 மற்றும் 8 யை Dual Boot அமைத்தல்

No comments
நாங்கள் முன்னதாகவே விண்டோஸ் 7 மற்றும் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை எவ்வாறு ஒரே கணணியில் Dual Boot அமைத்து நிறுவது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் எவ்வாறு VHD (Virtual Hard Disk) யை பயன்படுத்தி விண்டோஸ் 7 மற்றும் 8 யை Dual boot அமைத்து கணணியில் நிறுவுவது என்று பார்ப்போம். நீங்கள் நிறுவ வேண்டிய ஒபெரடிங் சிஸ்டங்களின் கோப்புக்களை நகலெடுக்க, கணணியில் புதிய பகிர்தல் (Partition) வடிவமைத்து அதன் மூலம் புதிய டிரைவ் ஒன்றை உருவாக்கி அதனுள் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் ஒரு முறை. அதே போன்று VHD மூலம் புதிய டிரைவ் உருவாக்கி குறிப்பிட்ட  ஒபெரடிங் சிஸ்டங்களை நிறுவுவது இன்னொரு முறை. இந்த பதிவில் விண்டோஸ் 7 மற்றும் 8 யை Dual boot அமைத்து நிறுவுவ நாங்கள் இரண்டாவது முறையையே தேர்ந்தெடுத்து உள்ளோம்.


VHD (Virtual Hard Disk) உருவாக்குதல்

VHD உருவாக்கி கொள்வதற்கு முதலில் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தில் இயங்கும் கணணியில் Win + R யை அழுத்தி, திறக்கும் Run திரையில் diskmgmt.msc என்று குறியுங்கள்.


அதை தொடர்ந்து MMC ஆனது Disk Management snap -in உடன் இயங்கும், அங்கே கணணியில் உள்ள நிலைவட்டுக்களின் மொத்த தகவலையும் பார்க்கலாம்.


புதிய VHD உருவாக்கிக் கொள்வதற்கு, திரையில் காட்டப்படும் மெனுவில் உள்ள "Action" என்பதை கிளிக் செய்து அதில் "Create VHD " என்பதை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து, உருவாக்கும் VHD யை சேமிக்க வேண்டிய இடத்தையும், கொள்ளளவையும் கொடுக்க வேண்டும். குறைந்தது 20 GB கொள்ளளவாக கொடுத்து, கிழே உள்ள தெரிவில் "Fixed Size" என்பதையும் தெரிவு செய்து தொடருங்கள்.

 அதை தொடர்ந்து VHD உருவாக்குதல் செய்முறை ஆரம்பிக்கும்

  
VHD உருவாகியவுடன், அது Disk Management snap -in உள்ள பகிர்தல் (Partition) பட்டியலில் காட்டப்படும். பின்னர் அதன் மேல் கிளிக் செய்து "Initialize Disk " என்பதை அழுத்துக.


அடுத்து தோன்றும் Initialize Disk திரையில் காட்டப்படும் தெரிவில் MBR (Master Boot Record) என்பதை தெரிவு செய்க

அதை தொடர்ந்து உருவாக்கிய பகிர்வுக்கு (Partition) உண்மையான Volume கொடுக்க வேண்டும், அதற்கு கறுத்த பகிர்வு இடத்தில் ரைட் கிளிக் செய்து "New Simple Volume " என்பதை அழுத்துங்கள்.


அடுத்து, குறித்த டிரைவ்வை Format செய்வதற்கான படிமுறைகளுடன் ஒரு Wizard தோன்றும், அதில்  காணப்படும் Volume label என்ற படிவத்தில் "Windows 8" என்று குறித்து கிழே உள்ள "Next " பொத்தானை அழுத்துங்கள்.


இப்போது நீங்கள் உருவாக்கிய புதிய VHD  Disk Management திரையில் காணலாம்
 




விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை VHD யில் நிறுவுதல் 

முதல் படிமுறையாக நீங்கள் ஸ்டார்ட் மெனுவில் உள்ள Windows Powershell க்கு சென்று அதில் ரைட் கிளிக் செய்து "Run as administrator " என்பதை கொடுங்கள்.

Start > All Programs > Accessories > Windows Powershell 


பின்னர் Windows Powershell திறக்கும், அதில் Execution Policy யை மாற்றி நீங்கள் ஸ்க்ரிப்ட்ஸ் (Scripts) ரன் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதை செய்வற்கு, Windows Powershell திரையில் "Set-Executionpolicy Remotesigned  " என்று கொடுங்கள். அடுத்து அதே திரையில் "Y" என்று குறித்து எண்டரை அழுத்தி Execution Policy யை ஏற்றுக்கொள்ளுங்கள்.


அடுத்து MSDN யில் இருந்து ஸ்க்ரிப்ட்ஸ் யை (Scripts) தரவிறக்கி கொள்ளுதல் வேண்டும். பின்னர் C: டிரைவ் வுக்கு செல்லுங்கள்


குறித்த டிரைவ் வில் காணப்படும் Install-WindowImage கோப்பின் மேல் ரைட் கிளிக் செய்து "Properties" என்பதை தெரிவு செய்க, அதோடு  திரையின் கிழே உள்ள "Unlock" பொத்தானை அழுத்தி செய்முறையை தொடருங்கள்.

அதை தொடர்ந்து windows Developer தளத்தில் இருந்து தரவிறக்கிய .ISO கோப்பை மவுண்ட் (Mount) செய்து கொள்ள வேண்டும். .ISO கோப்பை மவுண்ட் செய்ய தெரிய வில்லை என்றால் இங்கே குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். குறித்த .ISO கோப்பை மவுண்ட் செய்த பின்னர், டிரைவ் வின் ரூட்யை (Root) மாற்றிக்கொள்வற்க்கு  மீண்டும் Powershell விண்டோவுக்கு சென்று அங்கே  " CD C:\ " என்று குறியுங்கள்.


அத்தோடு, கிழே காட்டப்படும் கமென்ட்டில்  (Comment ) உள்ளவாறு Powershell விண்டோவில் குறியுங்கள்

.\Install-WindowsImage.ps1 -WIM J:\Sources\Install.wim -Apply -Index  1 -  Destination I:\  

குறிப்பு :

இங்கே குறிக்கப்பட்ட J:\ டிரைவ் letter, நீங்கள் ஏற்கனவே மவுண்ட் (Mount ) செய்து சேமித்து வைத்த DVD இமேஜ் டிரைவ் letter யை குறிக்கும்.

இங்கே I:\ டிரைவ் letter, நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய VHD டிரைவ் letter யை குறிக்கும்.


இந்த செய்கை முடிந்ததை நீங்கள் Powershell  விண்டோவில் அவதானிக்கலாம்


அடுத்து, விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் உள்ள command Prompt விண்டோவில், bcdboot.exe  I:\   என்று குறியுங்கள். (I:\  டிரைவ் வில் விண்டோஸ் 8 உள்ளது என்று நினைத்து கொள்ளுங்கள்)



அவ்வளவுதான், இனி விண்டோஸ் யை பூட் (Boot) செய்யும் பொழுது, புதிய ஒபெரடிங் சிஸ்டம் தெரிவிற்கான திரை தோன்றும்.


முடிந்தது
முன்னைய பதிவு: விண்டோஸ் 7 மற்றும் 8 யில் ISO இமேஜ் கோப்பை மவுண்ட் (Mount) அமைத்தல்

நன்றி 

No comments :

Post a Comment