e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

ஒருங்கிணைக்கப்பட்ட மேம்படுத்தல்களுடனான விண்டோஸ் 7 நிறுவுதல் இறுவட்டு உருவாக்குதல்

No comments
கணணியில் விண்டோஸ் நிறுவும் வேளை உங்கள் நேரங்களை மீதப்படுத்த வேண்டுமா? இன்றைய பதிவில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட மேம்படுத்தல்களுடனான (Integrated Updates) விண்டோஸ் 7 நிறுவுதல் செயற்பாட்டை கொண்ட (Installation) இறுவட்டை (Disk) உருவாக்குவது என்று பார்ப்போம். இந்த செய்முறையை தொடர்வதற்கு உங்கள் கணணியில் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவியிருக்க வேண்டும். அதோடு சேர்த்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 யில் இயங்க கூடிய Windows Automation Installation Kit  (WALK) என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். 

WALK கோப்பானது 1.7 GB கொள்ளளவு கொண்டது, இணையத்தில் இருந்து தரவிறக்கிய பின்னர் 7-Zip கொண்டு அதை Extract செய்து கொள்ளுங்கள்.


இப்போது Extract செய்து கொண்ட கோப்புக்களில் காணப்படும் StartCD.exe  என்ற கோப்பின் மேல் இருமுறை அழுத்தி இயக்கிவிடுங்கள். பின்னர் தோன்றும் Setup திரையில் இடது பக்கம் காணப்படும் "Windows AIK Setup"  என்பதை தெரிவு செய்யுங்கள்.அதை தொடர்ந்து விண்டோஸ் AIK நிறுவுதலுக்கூரிய செயன்முறைகளை பின் தொடருங்கள்.


இப்போது உங்களுக்கு விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதல் இறுவட்டோ அல்லது .ISO கோப்போ தேவை. அடுத்து விண்டோஸ் 7 கூரிய சரியான பதிப்பை (Windows - x86 or Windows - 32bit or windows - x64) தெரிவு செய்து RT Se7en Lite யை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.  

RT Se7en Lite யை பயன்படுத்துதல் 

முதலில், திரையில் கிழே உள்ள "Browse" பொத்தானை அழுத்தி உங்களுடைய விண்டோஸ் 7 கோப்புக்களை அங்கே கொடுக்க வேண்டும்.விண்டோஸ் 7 நிறுவுதல் இறுவட்டு இருக்கும் என்றால் இறுவட்டை கணணியில் செருகி "Select OS Path" என்பதை கிளிக் செய்து அங்கே கொடுங்கள் அல்லது உங்களிடம் விண்டோஸ் 7 கூரிய .ISO கோப்பு இருக்குமே ஆனால் ""Select ISO File"  என்ற தெரிவில் கிளிக் செய்து அங்கே கொடுங்கள்.  



நீங்கள் தெரிவு செய்தது .ISO கோப்பு என்றால், .ISO கோப்புக்களை Extract செய்து கொள்வதற்கு போதியளவு இடவசதி கொண்ட நிலைவட்டின் (Hard Disk) இடத்தை கொடுங்கள்.


பின்னர், OK யை அழுத்தியவுடன் தானாக நீங்கள் கொடுத்த நிலைவட்டில் .ISO கோப்புக்களை Extract செய்து கொள்ளும்.


விண்டோஸ் 7 குக்கூரிய சரியான பதிப்பை கொடுத்த பின்னர்,  RT Se7en Lite ஆனது இமேஜ் யை லோட் செய்யும். ஒருங்கிணைக்கப்பட்ட சேவை தொகுப்பு 1 (Integrated Service Pack) உங்களுடைய விண்டோஸ் 7 யில் இல்லை என்றால், SP1 னை ஒருங்கிணைப்பதற்காக "Select an image to Configure" னில் உள்ள Slipstream Service Pack தெரிவை கிளிக் செய்யுங்கள். 

என்ன பணி செய்யப்போகின்றீர்கள் என்பதை கொடுப்பதற்காக இடது பக்கம் உள்ள Task தெரிவை அழுத்துங்கள்.

 
அடுத்து, "Integration" தெரிவை அழுத்துவதன் மூலம் நிறுவுதல் இறுவட்டில் விண்டோஸ் மேம்படுத்தல்கள் (Updates), Drivers, மொழி தொகுப்பு (Language Pack ) போன்றவற்றை ஒருங்கிணைத்து கொள்ளலாம்.விண்டோஸ் மேம்படுத்தல்களை ஒருங்கிணைக்க தேவையான நிறுவுதல் கோப்புக்களை, கிழே காணப்படும் ADD பொத்தானை அழுத்துவதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அடுத்து, "Features Removal  " அழுத்துவதன் மூலம் விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டில் இருந்து கூறுகளை (Components ) நிரந்தரமாகவே நீக்கி விடலாம். அதோடு நிறுவுதளுக்கூரிய விண்டோஸ் அம்சங்களை (Features) கட்டுப்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டில் இருந்து Games களை நீக்கி விடலாம் அல்லது விண்டோஸ்யை கட்டாயப்படுத்தி IIS Web Server யை நிறுவிக்கொள்ளலாம்.  


அடுத்து, Tweaks தெரிவை அழுத்துவதன் மூலம், Default செட்டிங்க்ஸ்யை (Control Panel, Desktop, Explorer மற்றும் மற்றைய விண்டோஸ் கூறுகள் ) விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டில் தனிப்பயனாக்கி (Customize) கொள்ளலாம். 


அடுத்து, Unattended தெரிவை அழுத்துவதன் மூலம் விண்டோஸ் நிறுவுதல் நேரங்களில் கேட்கப்படும் நிறுத்தல் பற்றிய கேள்விகளுக்கு முன்னரே பதில் கொடுத்து வைக்கலாம்.  உதாரணமாக Product Key யை முன்னதாகவே இங்கே கொடுத்து வைத்தால் நிறுவுதல் வேளை விண்டோஸ்  Product Key யை வழங்க கேட்காது.


அடுத்து, Customization  தெரிவை அழுத்துவதன் மூலம் விண்டோஸ் 7 இறுவட்டில் வாடிக்கையான கூறுகளை (Screensaver's, Wallpapers, Thames, Documents, Logon Screen) இணைத்துக்கொள்ளாம்.


இறுதியாக ISO-Bootable தெரிவை அழுத்துவதன் மூலம், நிறுவுதல் இறுவட்டில் இருந்து ISO இமேஜ் உருவாக்கிக்கொள்ளலாம். அத்தோடு அதை DVD யில் Burn செய்து கொள்ளலாம் அல்லது bootable USB டிரைவ்வில் நகல் (Copy) எடுத்துக்கொள்ளலாம்.


RT Se7en Lite உருவாக்கியவர்கள் ஆலோசனை, நீங்கள் தனிப்பயனாக்கிய விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை கணணியில் பூட் செய்வதற்கு முன்னர், விண்டோஸ் 7 இமேஜ் யை பரிசோதிக்கும் நோக்கில் Virtual Machine யில் பூட் செய்த பிற்பாடு எல்லாம் சரியாக இருந்தால் பயம் ஏதும் இன்றி நேரடியாகவே கணணியில் பூட் செய்து கொள்ளுங்கள்.

முன்னைய பதிவு: விண்டோஸ் 8 யில் மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை உருவாக்குதலும் பயன்படுத்தலும்

நன்றி 

No comments :

Post a Comment