e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 7 யில் BitLocker Drive Encryption முறை மூலம் டிரைவை (Drive ) பாதுகாத்து கொள்ளல்

No comments
விண்டோஸ் 7ஒபெரடிங் சிஸ்டத்தில் வழங்கப்படும் BitLocker Drive Encryption வசதி மூலம் கணணியில்  எந்த டிரைவ்வை (Drive) பாதுகாத்து கொள்ளலாம். மென்பொருட்களை நிறுவி உங்கள் டிரைவ்வை பாதுகாப்பதை விட விண்டோஸ் 7 யில் உள்ள BitLocker Drive Encryption முறை சிறந்தது. இனி அது எவ்வாறு என்று பார்ப்போம்.

முதலில் விண்டோஸ் 7 யில் உள்ள "Control Panel " யை ஸ்டார்ட் மெனுவில் தெரிவு செய்க. 

பின்னர் “System and Security” > “BitLocker Drive Encryption” க்கு செல்க.






“BitLocker Drive Encryption” தெரிவு செய்த பின்னர் விண்டோஸ் 7 யில் உள்ள டிரைவ் அனைத்தும் திரையில் தோன்றும். அதில் எந்த டிரைவ்வை Encrypt செய்ய விரும்புகின்றீர்களோ அதில் உள்ள "Turn on BitLocker" மேல் அழுத்தி தெரிவு செய்யுங்கள். இங்கே E டிரைவ் தெரிவு செய்யபட்டிருக்கின்றது.


திறக்கும் புதிய திரையில் டிரைவரை திறப்பதற்க்கு மூன்று தெரிவுகள் இருக்கும்.  “Use a password to unlock the drive”, “Use my smart card to unlock the drive” and  “Automatically unlock this drive on this computer”. இங்கே E  டிரைவ்க்கு கடவுச்சொல் (Password) முறை பயன்படுத்தபட்டிருக்கின்றது. 



BitLocker பயனரது நன்மை கருதி recovery key யை சேமித்து வைக்க கிழே படத்தில் காட்டப்படும் வசதிகளை தருகின்றது. இங்கே BitLocker recovery key ஒரு கோப்பில் சேகரிக்கப்படுகின்றது. நீங்கள் பதிவு செய்த password யை மறந்து போனீர்கள் என்றால் இந்த recovery key யை பயன்படுத்தி டிரைவை திறந்து கொள்ளலாம்.






BitLocker recovery கீயை (Key) சேமித்த பின்னர்  “Next” யை தெரிவு செய்க. பின்னர் திறக்கும் திரையில் "Start Encrypting" தெரிவு செய்து செயற்ப்பாட்டை ஆரம்பித்து விடுங்கள்.


பின்னர் Encrypt செய்முறை ஆரம்பித்துவிடும்,  செய்முறை முடியும் வரை உங்கள் கணணியை shutdown பண்ணாதீர்கள்.


முடிந்தது உங்கள் டிரைவ் வெற்றிகரமாக encrypted பண்ணப்பட்டுவிட்டது. இனி நீங்கள் ஏற்கனவே கொடுத்த கடவுச்சொல்லை பயன்படுத்தி E டிரைவ்வை திறந்து கொள்ளலாம்.



குறிப்பு: இந்த செய்முறை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மட்டுமே பயன்படுத்தலாம். உங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் “BitLocker Drive Encryption” இல்லை என்றால் “Bitlocker”  என்று தேடிப்பாருங்கள்.


நன்றி 

No comments :

Post a Comment