e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

முகப்புத்தக பக்கத்தை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

No comments
இன்றைய காலங்களில் பாவித்த முகப்புத்தக பக்கத்தினை நிரந்தரமாக அழிப்பது தொடர்பாக முகப்புத்தக பாவனையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு சில பாவனையாளர்கள் தங்களுக்கென ஒன்றிற்கு மேற்பட்ட முகப்புத்தக கணக்குகளை பயன்படுத்துகின்றனர் . இதனால் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான முகப்புத்தக கணக்குகள் வைத்திருப்பதால் இடர்பாடுகளுக்கு ஆளாகின்றனர் . இதன் பொருட்டு குறித்த முகப்புத்தக கணக்கை நிரந்தரமாக அழித்து விட எண்ணுகிறார்கள். இப்பதிவின் ஊடாக எவ்வாறு குறித்த கணக்கை அழிப்பது என்பதை இலகு படிமுறை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.


  • அழிக்க வேண்டிய குறித்த முகப்புத்தக கணக்கை திறந்து கொள்ளவும்.
  • முகப்புத்தக பக்கத்தின் மேல் மூலையில் உள்ள செட்டிங் மெனுவை அழுத்துங்கள்.



  • பின்னர் தோன்றும் திரையில் கீழே காட்டப்பட்ட "Download a Copy" என்பதை அழுத்தவும்.


  • அதன் பின்  பின்வரும் லிங்கை "https://www.facebook.com/help/delete_account" அழுத்தி கீழே காட்டப்படுள்ள படத்தில் உள்ளவாறு Delete My Account என்பதை கொடுத்து குறித்த முகப்புத்தக கணக்கை அழித்து கொள்ளமுடியும். 


  • எல்லாம் முடிந்தது. நீங்கள் முன்னம் குறித்த முகப்புதகத்தில் பதிவிட்டு இருந்த அனைத்தும் 9௦ நாட்களில் நிரந்தமாக அழிந்துவிடும்.

No comments :

Post a Comment