e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 8 யில் மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை உருவாக்குதலும் பயன்படுத்தலும்

No comments
இன்றைய பதிவில் விண்டோஸ் 8 பற்றி முக்கியமான தகவல் ஒன்றை பார்க்கப்போகின்றோம். எவ்வாறு விண்டோஸ் 8 யில் மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை உருவாக்கி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

உங்களது கணணியை பழுதுபார்ப்பதற்கும் (Troubleshoot), மீள கணணியை முன்னைய நிலையில் (Restore) வைப்பதற்கும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் ஆனது மீட்பு (Recovery) டிரைவ்வ (USB) மற்றும் சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டையும் (CD/DVD) உருவாக்குவதற்கு உங்களை அனுமதிக்கின்றது.
எவ்வாறு மீட்பு (Recovery) டிரைவ்வை (USB) உருவாக்குவது 

இந்த செய்முறை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தில் மட்டும் வேலை செய்யும். விண்டோஸ் 7 யில் இந்த வசதி இல்லை.

முதலில் மீட்பு டிரைவ் உருவாக்குதல் கருவியை (Recovery Creation tool) திறப்பதற்கு, விண்டோஸ் சாவியை (Key) அழுத்தி அதில் "Recovery Drive" என்று குறியுங்கள். பின்னர் அதில் உள்ள "Setting " வகையை கிளிக் செய்து, அங்கே "Create recovery drive " என்பதை அழுத்தி தொடருங்கள். 


அதை தொடர்ந்து Recovery மீடியா creator உங்கள் டெஸ்க்டாப்பில் திறக்கும். உங்களது கணணி Recovery பகிர்வுடன் (Partition) வருமானால், அவற்றை உங்களது USB பிளாஷ் டிரைவ் வில் நகல் எடுத்து கொள்ள முடியும். அதற்கு அதிக கொள்ளளவு வசதி கொண்ட USB டிரைவ் தேவை.  


அதை தொடர்ந்து "Next" யை கிளிக் செய்து பின்னர் தோன்றும் திரையில் இணைக்க வேண்டிய USB டிரைவ் யை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் "Create" பொத்தானை கிளிக் செய்வதவுடன் கோப்புக்கள் அனைத்தும் USB பிளாஷ் டிரைவ் வில் நகல் எடுத்து கொள்ளப்படும்.


குறித்த செயற்பாடு முடிந்த பின்னர் விண்டோஸ் Recovery பகிர்வினை நிலைவட்டில் இருந்து அழிக்கவா? என்று கேட்கும். நீங்கள் Recovery பகிர்வினை அழித்தீர்கள் என்றால், உங்களது கணணியியை Refresh and Restart செய்வதற்கு USB டிரைவ் எதிர்காலத்தில் தேவைப்படும்.  

சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை (CD/DVD) உருவாக்குவதல் 

இந்த செய்முறை வசதி விண்டோஸ் 7 மற்றும் 8 யில் வழங்கப்பட்டுள்ளது 

முதலில், இறுவட்டு உருவாக்குதல் கருவியை (Disk Creation tool) திறப்பதற்கு, விண்டோஸ் சாவியை (Key) அழுத்தி அதில் "recdiscஎன்று குறித்து என்டரை  (Enter) தட்டுங்கள்.  


பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டையும் உருவாக்கி கொள்வதற்க்கு CD அல்லது DVD உள்ள Disc-Burner டிரைவ்வை தெரிவு செய்து, கிழே உள்ள "Create disc" என்பதை அழுத்துங்கள்.  



மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை பயன்படுத்துதல்

உங்களது கணணி பூட் ஆகாத வேளைகளில் சிஸ்டத்தை பழுதுபார்ப்பதற்கு விண்டோஸ் தானாகவே Advanced  Start up வசதியை ஏற்படுத்தும். சில சமயங்களில் Advanced  Start up வேலை செய்யாத வேளை நீங்கள் முன்னரே உருவாக்கிய மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டு அல்லது விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி கணணியை திருத்திக்கொள்ள முடியும். இதற்கு குறித்த ஏதாவது ஒரு மீடியாவை கணணியில் செருகி Restart செய்துவிடுங்கள். பின்னர் கணணி Recovery மீடியாவில் இருந்து பூட் ஆகும்.


Recovery மீடியாவில் இருந்து பூட் செய்ததன் பிற்பாடு, நீங்கள் கணணியை பழுது பார்ப்பதற்கான தெரிவை காண்பீர்கள்.


கணணியை சரி செய்து கொள்ளவதற்கு "Automatic Repair or System Restore" என்பனவற்றின் உதவியை நாடுங்கள்.

No comments :

Post a Comment