e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் xp யில் இயங்கும் கணணியை தானாக Shutdown செய்வது - பகுதி 2

No comments
முதல் செய்முறையாக நாங்கள் விண்டோஸ் 7 யில் எவ்வாறு தானாக கணணியை shutdown செய்வது என்று பகுதி 1 யில் இங்கே பார்த்தோம். இனி விண்டோஸ் XP யில் தானாக கணணியை Shutdown செய்வதற்கு task scheduler றை கட்டமைப்போம்.


விண்டோஸ் Xp யில் "Run command box" திறப்பதற்கு Key + R யை அழுத்துங்கள். பின்னர் தோன்றும் திரையில் “control schedtasks” (மேற்கோள் குறிகாட்டி இல்லாமல்) டைப் செய்து enterயை அழுத்துங்கள்.



அதை தொடர்ந்து Schedule task wizard ஆரம்பமாகும். கிழே படத்தில் காட்டப்பட்டவாறு Next > Browse அழுத்துங்கள்.


பின்னர் shutdown.exe என்ற கோப்பை (File) திறப்பதற்கு %SystemRoot%\System32 இடத்தில் உள்ள கோப்புக்கு (Folder) செல்லுங்கள். task wizard க்கு கிழே, task கின் உடைய பெயரையும், எந்த வேளையில் இந்த task கை இயக்கபோகிரீர்கள் (Daily விரும்பத்தக்கதாக உள்ளது) என்ற விருப்பையும் (Options) தெரிவு செய்யுங்கள். பின்னர் NEXT யை கிளிக் பண்ணுங்கள்.

அடுத்து வரும் திரையில் time ,performing interval குறியுங்கள், அத்தோடு “Next” யை அழுத்துங்கள்.

அடுத்ததாக உங்களது username,corresponding password என்பனவற்றை குறியுங்கள். பின்னர் “Next” யை அழுத்துங்கள்.  


அடுத்து திறக்கும் திரையில் open advanced properties for this task when clicking Finish என்ற சரிபார்க்கும் பெட்டியை (Check box) தெரிவு செய்யுங்கள். பின்னர் Finish பொத்தான் மேல் அழுத்துங்கள்.


அடுத்ததாக task திரை திறக்கும், “Task” பட்டியின் (tab) கிழே படத்தில் காட்டப்பட்டவாறு Run படிமத்தில் உள்ள shutdown.exe முடிவில் ஒரு இடைவெளி விட்டு -s -t 00 என டைப் செய்யுங்கள்.


பின்னர் கிழே படத்தில் காட்டப்பட்டவாறு “Settings” பட்டிக்கு மாறி, அங்கே Only start the task if the computer has been idle for at least: x நிமிடங்கள் என்ற சரிபார்க்கும் பெட்டியை தெரிவு செய்து பின்னர் “Apply” பொத்தானை கிளிக் செய்து  “OK” பண்ணுங்கள்.


நீங்கள் முடித்து விட்டீர்கள், இனி நீங்கள் கணணியை நிறுத்தாமல்.படுக்கைக்கு செல்லலாம்.

முன்னைய பதிவு : கமல் என்ற தமிழன் கோடி கோடியாய் சேர்த்த சொத்து அன்பு ஒன்றே

நன்றி 

No comments :

Post a Comment