e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

இரு விண்டோஸ் 7 கணணிகளை Lan நெட்வொர்க் மூலம் இணைத்தல்

No comments
நீங்கள் விண்டோஸ் 7 மூலம் அதிகமான கணணிகளை லேன் நெட்வொர்க் கொண்டு இணைத்து, workgroup மூலம் ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு கோப்புக்களை இலகுவாக பரிமாற்றி கொள்ளலாம். அத்தோடு கோப்புக்களை அதி வேகத்துடனும், இடையுர்கள் இல்லாமல் கணணிகளுக்கு இடையில் பரிமாற்ற வேண்டுமாயின் Ethernet கேபிள் பயன்படுத்துதல் சிறந்தது. 

எப்படி கணணிகளுக்கு ஹோம் நெட்வொர்க் (Home Network) அமைப்பது முதலில் பார்ப்போம்.

இந்த செய்முறைக்கு தேவையானவை

  • Crossover கேபிள் (நீங்கள் விரும்பினால் Straight கேபிள் கூட பயன்படுத்தலாம்)
  • இரு கணணியும் நெட்வொர்க் கார்டு (Network Card) சப்போர்ட் செய்வதாக இருத்தல் வேண்டும். அதோடு சேர்த்து Ethernet டிரைவர் (Driver) நிறுவி இருக்க வேண்டும்.

இனி கணணிகளையும்  கட்டமைபோம் (configure

முதலில் இரு கணணிகளையும் இணைப்பதற்கு வேறுபட்ட IP Address யை கணணிகளுக்கு கொடுத்தல் வேண்டும். அதற்கு இங்கே செல்லுங்கள்,

Start Menu > Control Panel > Network and Internet > Network and sharing center  





பின்னர் "Change adapter settings " யை  கிளிக் செய்யுங்கள்.


பிறகு உங்களுடைய கணணி Lan adapter யை தெரிவுசெய்து, அதோடு Properties செல்வதற்கு ரைட் கிளிக் செய்யுங்கள். 



அதை தொடர்ந்து Local Area Connection க்குரிய properties திரையில் தோன்றும், அதில் நெட்வொர்க் டப் யில்  (Network Tab) உள்ள Internet Protocol version 4 TCP/IPV4 தெரிவு செய்வதோடு, கிழே காணப்படும் properties பொத்தானை அழுத்துங்கள்  



பின்னர் தோன்றும் திரையில் கிழே கொடுக்கப்பட்டவாறு  IP Address யை கொடுங்கள்.

முதல் கணணிக்கு இவ்வாறு,  

IP Address : 192.168.1.1

Sunet Mask : 255.255.255.0

அடுத்து இரண்டாவது கணணிக்கு இவ்வாறு கொடுங்கள்.


IP Address : 192.168.1.2

Sunet Mask : 255.255.255.0

கணணிகளுக்குரிய IPs கட்டமைப்பை செய்து முடித்து விட்டீர்கள், இனி எவ்வாறு கணணிகளை இணைப்பது. இதை செய்வதற்கு இரு கணணிகளில் உள்ள Ethernet port யில் தெரிவுசெய்த Cable லின் இரு முனைகளையும் பொருத்திவிடுங்கள். அதன் பின்னர் இந்த செய்முறையை தொடருங்கள்.

முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள கம்ப்யூட்டர் (Computer) யை தெரிவு செய்து , அதில் ரைட் கிளிக் செய்து Properties யை அழுத்துங்கள். பின்னர் சிஸ்டம் properties திரை திறக்கும்.



அதில் "Change Settings " என்பதை அழுத்தி, சிஸ்டம் properties குரிய புதிய tab திரையில் திறக்கும். அங்கே computer name என்பதற்கு கிழே உள்ள "Change "  என்பதை அழுத்தி "Workgroup" யை ஒப்படையுங்கள் (Assign).




நீங்கள் Workgroup யை ஒப்படைக்கும் போது Workgroup க்கு ஒரே பெயரை கொடுங்கள், பெயர் வேறாக இருந்தால் அது வேலை செய்யாது.


பின்னர் இரு கணணியும் ரிஸ்டார்ட் (Restart) செய்துவிடுங்கள். எல்லாம் சரியாக கொடுத்து இருந்தால் முதல் கணணியில் இரண்டாவது கணணியை குறிக்கும் icon காணப்படும். இரண்டாவது கணணியில் முதல் கணணியை குறிக்கும் icon காணப்படும்.



பின்னர் உங்கள் கணணியில் "Turn on network discovery and files sharing " என்ற தகவல் தோன்றினால் கிளிக் செய்யுங்கள். திறக்கும் திரையில் "Make the network a private network" என்பதை தெரிவுசெய்யுங்கள்.


இனி கோப்புக்களை பகிர நெட்வொர்க் பக்கத்தில் இணைத்த கணணியின் icon மேல் இரு தடவை கிளிக் செய்து, சரியான username, password களை கொடுத்து உள்ளே நுழையுங்கள். பகிர வேண்டிய கோப்பின் (File) மீதோ அல்லது கோப்புறையின் (Folder) மீதோ ரைட் கிளிக் செய்து, அதில் Share with > Homegroup  தெரிவுசெய்து ஆவணங்களை கணணிகளுக்கிடையில் பரிமற்றிக் கொள்ளுங்கள்.

    
நீங்கள் வெற்றிகரமாக இரு விண்டோஸ் 7 கணணிகளை இணைத்து, கோப்புக்களை பரிமாற்றி கொள்ளும் வசதியை கணணிகளுக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்.

முன்னைய பதிவு : விண்டோஸ் 7 யில் ரௌட்டர் இல்லாமல் wireless நெட்வொர்க் வலையமைப்பை உருவாக்குதல்

நன்றி. 

No comments :

Post a Comment