ஏற்கனவே நிறுவிய விண்டோஸ் 7 புதிய கணணிக்கு பரிமாற்றுதல் (Transfer)

உங்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக பழைய விண்டோஸ் 7 யை புதிய கணணிக்கு பரிமாற்றுதல் (Transfer) செய்முறையே, விண்டோஸ் 7 யை மீள நிறுவுதலை விட சிறந்த தெரிவாகும். இந்த செய்முறையே ஆரம்பிப்பதற்க்கு முன்பு பின்வருவனவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும்.
- ஏற்கனவே நிறுவிய விண்டோஸ் 7 யை கொண்ட வன்தட்டு (Hard disk) கணணியில் இருத்தல் அவசியம்.
- பழைய கணணியில் உள்ள விண்டோஸ் 7 யை புதிதாக வாங்கிய கணணிக்கு பர்மாற்றும் நடவடிக்கை இது. அத்தோடு புதிதாக வாங்கிய கணணியில் வித்தியாசமான configuration இருக்கும்.
இனி எவ்வாறு ஏற்கனவே நிறுவிய விண்டோஸ் 7 யை புதிய கணணிக்கு பரிமாற்றுவது (Transfer) என்று பார்ப்போம். முதலில்
- விண்டோஸ் 7 யை ரன் கமெண்ட் (run comment) ஊடாக பூட் (boot) செய்தல் வேண்டும். அதற்க்கு (Start >All Programs > Accessories >Right-click on Command Prompt > Click on “Run as administrator”) செல்லுங்கள்.
- கமெண்ட் ப்ரோம்டில் (Comment Prompt ) பின்வருமாறு டைப் செய்யுங்கள். %windir%\System32\Sysprep\Sysprep.exe , பின்னர் எண்டரை அழுத்துக.
- பின்னர் System Preparation திரையில் தோன்றும். அதில் System Cleanup செய்முறைக்காக Enter System Out-of-Box-Experince (OOBE) என்பதை தெரிவு செய்க. அதோடு Generalize செக் பாக்ஸ் யை தெரிவுசெய்க, பின்னர் கிழே Shutdown ஆப்சனையும் தெரிவுசெய்து ஓகே பண்ணுங்கள்.
- பின்னர் கிழே காட்டப்படும் செய்கைகள் ஆரம்பிக்கும், அது முடிந்ததும் கணணி shutdown ஆகும். குறிப்பு: Do not run any other programs when the process is on the way.
- இப்போது நீங்கள் உங்கள் பதிய வன்பொருளை இடம் மற்றலாம் அல்லது வன்தட்டை புதிய கணணிக்கு மாற்றலாம். இனி உங்களது கணணியை பூட் செய்ய தயாராகுங்கள். கணணியை பூட் செய்யும் போது, Generalize செய்த விண்டோஸ் 7 உள்ள வன்தட்டில் இருந்து பூட் செய்யுங்கள்.
- பின்னர் நீங்கள் உங்கள் கணணி பூட் செய்முறையை புதிய விண்டோஸ் 7 வடிவில் ஆரம்பிற்பதை அவதானிப்பீர்கள். அதோடு விண்டோஸ் 7 இயங்குவதற்கு தேவையான டிரைவர்ஸ்யையும், system registry அப்டேட் செய்து நிறுவும்,
- இனி பூட் இறுதி கட்டத்தை அடையும் போது, புதிதான நிறுவுதலுக்கு அவசியமான தகவல்களை கொடுத்தல் வேண்டும்.
- இனி கணணியில் பயனரை உருவாக்கவேண்டும், அதில் பழைய பயனர் பெயர்களை கொடுக்கும்போது விண்டோஸ் 7 குறித்த பயனர் பெயரை நிறுவவிடாது. நீங்கள் புதிய பயனர் பெயரை தெரிவுசெய்வதே நல்லது.
- இப்போது தற்காலிகமான பயனர் பெயரை உருவாக்கி, பின்னர் உங்களுடைய பழைய பயனர் பெயரில் கணணியை log-on செய்து கொள்ளலாம்.
- நீங்கள் உங்களது கணனியில் விண்டோஸ் 7 யை பரிமாற்றம் செய்து வெற்றிகரமாக நிறுவிவிட்டீர்கள். இனி தற்காலிக பயனர் கணக்கை அழிக்க வேண்டும் என்றால் Control Panel > User Profile சென்று அங்கே கணக்கை அழித்துவிடலாம்.
நன்றி
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment