e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 7 யில் System Restore Point உருவாக்குதலும் நீக்குதலும்

No comments
உங்கள் கணணியில் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவியிருந்தால், டெஸ்க்டாப் யில் உள்ள கம்ப்யூட்டர் icon மீது ரைட் கிளிக் செய்து properties யை தெரிவு செய்க. பின்னர் control panel இருந்து சிஸ்டம் properties திரை திறக்கும். இதை இந்த வழி  மூலம்மும் சிஸ்டம் properties விண்டோவ்வுக்கு செல்லலாம்.



Control Panel > System and security > System or pressing Win key + pause/Break key  


தோன்றும் திரையில் இடது பக்கத்தில் உள்ள System Protection டப் யில் கிளிக் செய்ததும், System Proterties விண்டோ திறக்கும் அதில் Create பொத்தானை அழுத்துக.



அடுத்த திறக்கும் திரையில் நீங்கள் உருவாக்க இருக்கும் System Restore Point யை பின்னர் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள விபரிக்க கேட்கும். System Restore Point க்கு தகுந்த பெயரை கொடுத்த பின்னர் Create என்பதை அழுத்துக.


புதிய System Restore Point யை வெற்றிகரமாக உருவாக்கி விட்டீர்கள்.  


புதிதாக உருவாக்கிய System Restore Point தவிர பழைய System Restore Point யை நீக்குதல்

கம்ப்யூட்டர் விண்டோவில் உள்ள ரூட் டிரைவில் (Root Drive) ரைட் கிளிக் செய்து properties யை தெரிவு செய்க


திறக்கும் திரையில் General டப் யின் (tab) கிழே உள்ள Disk cleanup என்பதை தெரிவு செய்க 


இப்போது உங்கள் சிஸ்டம் இலவச இடத்தின் அளவை மதிப்பிடு செய்யும் செயலில் ஈடுபடும்.


பின்னர் disc cleanup திரை தோன்றும் அதில் Cleanup system Files என்பதை தெரிவு செய்க.


அதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை உங்கள் சிஸ்டம் இலவச இடத்தின் அளவை மதிப்பிடு செய்யும் செயலில் ஈடுபடும்


அடுத்து disc cleanup திரையில் புதிதாக more option டப் ஓன்று உருவாகி இருக்கும், அதில் கிளிக் செய்து System Restore and shadow copies பிரிவில் உள்ள Clean up பொத்தானை அழுத்துக. 


பின்னர் தோன்றும் திரையில் Delete என்பதை அழுத்தி உறுதிபடுத்துங்கள்


முடிந்தது வேலை, உங்கள் சிஸ்டத்தில் உள்ள புதிய System Restore Point தவிர  எல்லா பழைய System Restore Point யை  நீக்கி விட்டீர்கள்.


நன்றி 

No comments :

Post a Comment