e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

எவ்வாறு விண்டோஸ் 7 யில் Wireless Ad Hoc Network உருவாக்குதல்

No comments

Ad Hoc வலையமைப்பானது, ஒரே நேரத்தில் பல கணனிகளுக்கு இடையில் கோப்புக்களையும், இணைய வலையமைப்பையும் பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட சிறந்த வலையமைப்பாகும் (Ad Hoc Network ).  
இனி இந்த வலையமைப்பை விண்டோஸ் 7 யில் எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம். முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள தேடுதல் படிவத்தில் "Wireless" என டைப் செய்யுங்கள். பின்னர் மேலே தோன்றும் பட்டியலில் இருந்து "Manage wireless network" என்பதை தெரிவுசெய்க.




பின்னர் திறக்கும் திரையில் "Add " பொத்தானை அழுத்தி தொடருங்கள்



பின்னர் தோன்றும் திரையில் "Create an Ad Hoc network" என்பதை தெரிவு செய்க



தோன்றும் திரையில் "Set up a wireless ad hoc network" என்ற தகவல் காட்டி திறக்கும், அதில் "Next " யை தெரிவு செய்து செய்முறையை தொடருங்கள்.


அந்த செய்கையை தொடர்ந்து பின்னர் திறக்கும் திரையில் வலையமைப்பு பெயர் (Network name), பாதுகாப்பு வகை (Security type ), பாதுகாப்பு key  யை (Security Key) என்பனவற்றை உரிய படிவத்தில் கொடுக்க வேண்டும். இந்த Ad Hoc வலையமைப்பை தொடர்ந்து பயன்டுத்துபவராக நீங்கள் இருந்தால் "Save this network" என்பதையும் தெரிவுசெய்க.


பின்னர் நீங்கள் அமைத்த வலையமைப்பை உருவாக்க சில நிமிடங்கள் எடுக்கும்.



பின்னர் தோன்றும் திரையில், நீங்கள் உருவாக்கிய வலையமைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட தகவலை பிரதிபலிக்கும்.  


அடுத்து Ad Hoc வலையமைப்பை உறுதிபடுத்தி கொள்ள  task bar யில் உள்ள wireless icon கனை தெரிவுசெய்யுங்கள். அதில் நீங்கள் உருவாக்கிய வலையமைப்பு பெயர் தோன்றும், அருகிலேயே "Waiting for users" என்று தோன்றும்.


இப்போது உங்கள் தொடர்பில் உள்ள அடுத்த கணணியில் task bar யில் உள்ள wireless icon கனை தெரிவுசெய்யுங்கள். அதில் நீங்கள் ஏற்கனவே உருவாகிய Ad Hoc வலையமைப்பு பெயர் காணப்படும். அதில் Ad Hoc வலையமைப்பை இணைக்க  "Connect " என்பதை அழுத்துங்கள்.


இறுதியாக Ad Hoc வலையமைப்பை இணைத்துவிட்டீர்கள், இனி நீங்கள் உங்கள் கோப்புக்களை மற்றைய கணிணியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம். ஆனால் இணைய பரிமாற்றத்திற்கு, wireless adapter icon கனில் ரைட் கிளிக்  செய்து அதில் "Properties" > "Sharing tab" செல்லுங்கள். அங்கே "Allow other network users to connect through this computer Internet Connection" என்பதை அழுத்துங்கள்.


பின்னர் "Setting" பொத்தானை அழுத்தி அதில், கணிணிகளுக்கு இடையிலான வலையமைப்புக்களை தெரிவு செய்க. 


முடிந்தது, நீங்கள் Ad Hoc வலையமைப்பை உங்கள் கணணிகளுக்கு இடையில் உருவாக்கிவிட்டீர்கள்.

நன்றி 

No comments :

Post a Comment