e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

தமிழில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தல்

No comments
மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை உலகம் முழுவதும் உள்ள கணினி பயனர்களை சென்றடைய பலதரப்பட்ட யுக்திகளை கையாள்கின்றது. பல்வேறு பட்ட மக்களை கவர அவர்களின் மொழியிலேயே விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது . அந்த வகையில் தமிழை தங்கள் தாய் மொழியாக கொண்டு உலகத்தின் இண்டு இடுக்கில் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் இனி கணினியில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழிலேயே பயன்படுத்தலாம். 

முதலில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயபடுத்த தங்கள் கணினிக்கு பொருந்தும் 64 பிட் அல்லது 32 பிட் பதிப்பிற்கான மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தேவையான கோப்புக்களை தரவிறக்கிய பின்னர் மென்பொருள் உரிமத்தை அமோதித்து வழமையான நிறுவுதல் முறையில் தமிழுக்கான மொழி இடைமுகத் தொகுப்பை கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 

கணினியில் நிறுவிய பிற்பாடு மீண்டும் "Next " யை சொடுக்குங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணினியில் காட்டக்கூடிய மொழியாக தமிழை தெரிவு செய்யுங்கள். தொடர்ந்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை அழுத்தி பின்னர் "Change display language" என்பதையும் தெரிவு செய்க.

முடிந்தது, உங்கள் கணினியை ஒருமுறை மீள ஆரம்பித்து (Restart) விடுங்கள். இனி உங்கள் கணினியில் விண்டோஸ் 7 இயங்கு தளம் தமிழில் இயங்குவதை   காண்பீர்கள். அனைத்து செயல்களும், வசதிகளும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விடயங்கள் தமிழிலேயே காணப்படும்.



ஆங்கில மொழி தெரியாதவர்கள் இலகுவாக தமிழில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தலாம்.

மீண்டும் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ள, ஸ்டார்ட் மெனு > கட்டுப்பாட்டு பலகம் > காட்சி மொழியை மாற்றவும்   என்பதை தெரிவு செய்யுங்கள். பின்வருமாறு தோன்றாவிடின் கட்டுப்பாட்டு பலகம் > வட்டாரம் மற்றும் மொழி என்பதை தெரிவு செய்து பின்னர் தோன்றும் திரையில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்ற பகுதியில் "காட்சி மொழி ஒன்றை தெரிவு செய்யவும்" என்பதற்கு கிழே "English" என்பதை தெரிவு செய்க.

மீண்டும் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழுக்கு (நிறுவிய பின்னர்) மாற்றிக்கொள்ள, Control Panel > Change Display Language என்பதில் மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு வராதவர்களுக்கு Control Panel >  Region and Language என்பதை தெரிவு செய்து பின்னர் தோன்றும் திரையில் Keyboard and Language என்ற பகுதியில் Choose a Display Language என்பதற்கு கிழே "தமிழ்என்பதை தெரிவு செய்க.


நன்றி 

No comments :

Post a Comment