e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

கணனி நெட்வொர்க் பற்றி அறிந்து கொள்வோம்.

முதலில் நெட்வொர்க் IP Address பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் யாருக்காவது ஈமெயில் பண்ணும் பொழுது ஈமெயில் அனுப்பும் குறித்த நபரின் அட்ரஸ்யை கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு கணனியில் இருந்து இன்னுமொரு கணனிக்கு தகவல் பறிமாற்றிக்கொள்ள  முக்கிய அட்ரஸ் தேவைப்படும். இந்த அட்ரஸ் IP Address என்று அழைக்கப்படும். அது இவ்வாறு காணப்படும்.

வன்பொருளில் (Hardware) ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hardwareகளில் பலவிதமான error செய்திகள் காணப்படும். Windows நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற error செய்திகள் அதிகமாக காணப்படும். Hardware மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில Fileகள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும். அந்த Fileகளால் நம்முடைய கணினியில் அடிக்கடி error செய்தி காட்டும். Hardwareல் மென்பொருள்களை நிறுவும் போது sector பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும். இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் Hardwareல் error செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற error செய்திகளை சரி செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்க http://www.wieldraaijer.nl/

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த application open செய்து வேண்டிய drive கோலனை தேர்வு செய்து, Read only button அழுத்தி சோதனை செய்து கொண்டு, error செய்தி இருப்பின் Fix button அழுத்தவும். Error செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover button அழுத்தி இந்த error செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 operating systemக்கு  இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். Hardware சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.


நன்றி 

இலக்கு ஒன்றே உறுதி வீறுநடை போடு என் நண்பனே

மாணவர்கள் சக்திக்கு எத்தனை பெரிய வலு உண்டு என்பதை மாணவர்களே அறிந்து கொண்ட மகத்தான நேரம் இது. மாணவர்களின் போராட்ட களம் வீரியம் பெறுகின்ற முக்கிய காலகட்டத்தில் தமிழனம் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டிய கடமை ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவ சமூகம் தன்மானம் உள்ள தமிழனை எதிர்பார்த்து அழைப்பு விடுக்கின்றது.  அவர்களோடு தோளோடு தோள் நின்று  போராட்ட இலக்கை அடையும் வரை அவர்களின் இலட்சியத்தையும் உறுதியையும் இறுக அணைத்துக்கொள்வோம்.

தொடர் தமிழக மாணவர்கள் எழுச்சி

என்றுமே தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான உறவு தொப்புள்கொடி உறவாக உயிர்ப்புடன் நிலைத்து நீடிக்கின்றது. தமிழர்கள் அல்லாத சில சுயநல ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட விடுதலை உணர்வு இப்போது (எப்போதும்) தமிழக மக்களின் உள்ளங்களில் பொங்கி வீறுநடை போடுகின்றது.  இந்த உணர்வு முத்துக்குமார் மூட்டிய தீயின் தணல். அதன் உண்மை வெப்பம் தமிழர் சமுதாயத்தின் உள்ளங்களை சுட்டெரிக்க தமிழகம் எங்கும் உருவானது விடுதலை தீப்பொறி.

விசம் குடித்த தத்துவ மாமேதை

மனித சமுதாயத்தின் சிந்தனை திறனை நுணுக்கமாக கூர்மைப்படுத்தி, மனிதனை மேம்படுத்தி சிறந்த வாழ்க்கை முறைக்கு வழி காட்டியது தத்துவமே. அந்த தத்துவ வாதங்களை தாங்க முடியாமல் சாக்கிரட்டீஸ் என்கின்ற தத்துவ மேதைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை யாரால் மறக்க முடியும்.   

உலகமே இன்றுவரை மறக்காமல் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டும் மாபெரும் மாமேதை சாக்கிரட்டீஸுக்கு மரண தண்டனை விதித்தது ஒரு ஜனநாயக ஆட்சி என்பது சாமானியர்கள் பலருக்கு தெரியாத உண்மை.

அதிரடி புரட்சி மன்னன் (கி.மு கி.பி)

மதன் அவர்களால் எழுதப்பட்ட கி.மு கி.பி என்ற முகநூலில் சில பக்கங்களில் இருந்து பண்டைய நாகரீக சரித்திரங்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை படித்ததில் இருந்து வாசகர்களுக்கு பகிர வேண்டும் என்ற தூண்டுதலில் புரட்சி மன்னன் ஆமன் கோடப் என்ற எகிப்திய மன்னனை பற்றிய பதிவை இடுகின்றேன். 

என்ன நேர்ந்தாலும் சரி, என் மனதில் உண்மை என்று பட்டதை சொல்லியே தீருவேன் என்று பிடிவாதமாக வாழ்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கின்றது. சூரியன் மையத்தில் இருக்க பூமி அதை சுற்றி வரும் கிரகம் என்றார் கலிலியோ. அப்படி சொல்லி பூமியின் மதிப்பையும், புனிதத்தையும் குறைத்ததற்காக போப் ஆண்டவரின் காலடியில் கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது.

தமிழில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தல்

மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை உலகம் முழுவதும் உள்ள கணினி பயனர்களை சென்றடைய பலதரப்பட்ட யுக்திகளை கையாள்கின்றது. பல்வேறு பட்ட மக்களை கவர அவர்களின் மொழியிலேயே விண்டோஸ் 7 இயங்கு தளத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது . அந்த வகையில் தமிழை தங்கள் தாய் மொழியாக கொண்டு உலகத்தின் இண்டு இடுக்கில் பரந்து வாழும் அத்தனை தமிழர்களும் இனி கணினியில் விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழிலேயே பயன்படுத்தலாம். 

விண்டோஸ் 8 யில் Password Reset Disk அல்லது USB உருவாக்கி பயன்படுத்துதல்.

கணணியின் பாதுகாப்பிற்காக அனைவரும் கடவுச்சொல் பயன்படுத்துவது வழக்கம். அப்படி கொடுத்த கடவுச்சொல்லை மறப்பதும் இயல்பு. மறதி மனித இனத்தின் பரம்பரை வியாதி, அந்த இக்கட்டான  வேளைகளில் கணணியை கடவுச்சொல் கொடுத்து திறக்கும் போது பிழை என்று வரும் பொழுது நீங்கள் கடுப்பாகுவது எங்களுக்கு தெரியும். இந்த நிலைமைகளை தவிர்பதற்க்கான Password Reset Disk என்ற வசதியை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் வழங்குகின்றது. 

விண்டோஸ் 7 யில் BitLocker Drive Encryption முறை மூலம் டிரைவை (Drive ) பாதுகாத்து கொள்ளல்

விண்டோஸ் 7ஒபெரடிங் சிஸ்டத்தில் வழங்கப்படும் BitLocker Drive Encryption வசதி மூலம் கணணியில்  எந்த டிரைவ்வை (Drive) பாதுகாத்து கொள்ளலாம். மென்பொருட்களை நிறுவி உங்கள் டிரைவ்வை பாதுகாப்பதை விட விண்டோஸ் 7 யில் உள்ள BitLocker Drive Encryption முறை சிறந்தது. இனி அது எவ்வாறு என்று பார்ப்போம்.

ஒருங்கிணைக்கப்பட்ட மேம்படுத்தல்களுடனான விண்டோஸ் 7 நிறுவுதல் இறுவட்டு உருவாக்குதல்

கணணியில் விண்டோஸ் நிறுவும் வேளை உங்கள் நேரங்களை மீதப்படுத்த வேண்டுமா? இன்றைய பதிவில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட மேம்படுத்தல்களுடனான (Integrated Updates) விண்டோஸ் 7 நிறுவுதல் செயற்பாட்டை கொண்ட (Installation) இறுவட்டை (Disk) உருவாக்குவது என்று பார்ப்போம். இந்த செய்முறையை தொடர்வதற்கு உங்கள் கணணியில் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவியிருக்க வேண்டும். அதோடு சேர்த்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 யில் இயங்க கூடிய Windows Automation Installation Kit  (WALK) என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். 

விண்டோஸ் 8 யில் மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை உருவாக்குதலும் பயன்படுத்தலும்

இன்றைய பதிவில் விண்டோஸ் 8 பற்றி முக்கியமான தகவல் ஒன்றை பார்க்கப்போகின்றோம். எவ்வாறு விண்டோஸ் 8 யில் மீட்பு (Recovery) டிரைவ் அல்லது சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டை உருவாக்கி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

உங்களது கணணியை பழுதுபார்ப்பதற்கும் (Troubleshoot), மீள கணணியை முன்னைய நிலையில் (Restore) வைப்பதற்கும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் ஆனது மீட்பு (Recovery) டிரைவ்வ (USB) மற்றும் சிஸ்டம் பழுதுபார்க்கும் (Repair) இறுவட்டையும் (CD/DVD) உருவாக்குவதற்கு உங்களை அனுமதிக்கின்றது.

விண்டோஸ் 7 நிறுவ USB பிளாஷ் டிரைவ்வை வடிவமைத்தல்

இன்றைய பதிவில் USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி எவ்வாறு விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை கணணியில் நிறுவுவது என்று பார்ப்போம். USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவது என்பது DVD யில் இருந்து விண்டோஸ் 7யை நிறுவதற்கு சமமானது.பல வசதிகளை பயன்படுத்தி எவ்வாறு Bootable USB டிரைவ் உருவாக்கி அதனுள் விண்டோஸ் 7யை நகலடுப்பது என்று இப்போது கவனிப்போம். 

குறிப்பு : விண்டோஸ் 7 யை சேமிக்க குறைந்த பட்சம் 4 GB கொள்ளளவு கொண்ட USB டிரைவ் தேவை

கணணி பூட் செய்யாத வேளை விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி கோப்புக்களை பேக்கப் எடுத்தல்

உங்களது கணணி திடீர் என பூட் செய்யாத வேளை விண்டோஸில் உள்ள உங்களது முக்கிய  கோப்புக்களை மீள பெறுவது கடினமான விடயமாக இருக்கும். இந்த இக்கட்டான நேரங்களில் விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி கோப்புக்களை இலகுவாக மீட்டுக்கொள்ள முடியும். இந்த பதிவில் காட்டப்படும் செய்முறைகள் விண்டோஸ் 7 மற்றும் 8 ஒபெரடிங் சிஸ்டம் இரண்டிற்கும் பொருந்தும்.உதாரணமாக நீங்கள் விண்டோஸ் 7 நிறுவுதல் இறுவட்டை பயன்படுத்தி விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள கோப்புக்களை பேக்கப் செய்து மீள பெற்றுக்கொள்ள முடியும். 

வில்லங்கமான திரைவிமர்சனங்களின் பார்வை

இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் தயாரித்து, இயக்கி, நடித்து  வெளிவந்தாலும், அந்த படத்திற்காக செலவழித்த பணத்தை வருமானத்துடன் மீள எடுப்பது என்பது குரங்கு கையில் மாட்டிய தொப்பி கதையாய் ஆகிவிட்டது.சரி வருமானத்தை விடுவோம், போட்ட காசையே திரும்ப எடுப்பது என்பது பெரும் சவாலாய் உள்ளது தயாரிப்பாளருக்கு. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறு கிராமம் ஆகிப்போனாலும் சினிமா துறைக்கு அது பெரும் கிரகம் ஆகிப்போனதும்  இணைய வலையமைபின் ஒரு சாதனையே. ஒரு பக்கத்தில் சினிமா துறைக்கு கணணி மயமாக்கல் சாதகமாக அமைந்தாலும் அதே அளவு பாதகமாகவும் அமைந்து விட்டது.

VHD மூலம் விண்டோஸ் 7 மற்றும் 8 யை Dual Boot அமைத்தல்

நாங்கள் முன்னதாகவே விண்டோஸ் 7 மற்றும் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை எவ்வாறு ஒரே கணணியில் Dual Boot அமைத்து நிறுவது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் எவ்வாறு VHD (Virtual Hard Disk) யை பயன்படுத்தி விண்டோஸ் 7 மற்றும் 8 யை Dual boot அமைத்து கணணியில் நிறுவுவது என்று பார்ப்போம். நீங்கள் நிறுவ வேண்டிய ஒபெரடிங் சிஸ்டங்களின் கோப்புக்களை நகலெடுக்க, கணணியில் புதிய பகிர்தல் (Partition) வடிவமைத்து அதன் மூலம் புதிய டிரைவ் ஒன்றை உருவாக்கி அதனுள் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் ஒரு முறை. அதே போன்று VHD மூலம் புதிய டிரைவ் உருவாக்கி குறிப்பிட்ட  ஒபெரடிங் சிஸ்டங்களை நிறுவுவது இன்னொரு முறை. இந்த பதிவில் விண்டோஸ் 7 மற்றும் 8 யை Dual boot அமைத்து நிறுவுவ நாங்கள் இரண்டாவது முறையையே தேர்ந்தெடுத்து உள்ளோம்.

விண்டோஸ் 7 மற்றும் 8 யில் ISO இமேஜ் கோப்பை மவுண்ட் (Mount) அமைத்தல்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்,  ISO இமேஜ் கோப்பை மவுண்ட் செய்வதற்கான உபயோகம் விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா வில் வேலை செய்வது இல்லை. அதற்காக Virtual Clone Drive யை பயன்படுத்தி இலகுவாக ISO இமேஜ் கோப்பை மவுண்ட் செய்து கொள்ளலாம்.   அதோடு ISO, .CCD, .DVD, .IMG, .UDF, .BIN கோப்புக்களையும் மவுண்ட் செய்து கொள்ளலாம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி,  ISO இமேஜ் யை மவுண்ட் செய்ய தேவையான செய்கையினை ஆரம்பியுங்கள்.   

நான் ராவணன் வம்சம்..

நாற்பது லெட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமி ஒரு உருண்டை வடிவமான சுழலும் வெறும் பாறை. பின்னர் பல லெட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மண், நீர், மலை,பச்சை தாவரங்கள் என இப்போது நாம் வாழும் பூமியாக காட்சியளித்தது. முதல் உயிரினமான மீன் வகையோடு சேர்த்து ஊர்வன, பறவைகள் இறுதியாக மனித இனம் என்று பூவியில் உயிரின விருட்சம் படிப்படியாக தோன்றின.



கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல்-02


கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல் -01 தொடர்ச்சியாக, இந்த பதிவில் நாங்கள் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை எவ்வாறு Virtual Machine னுள் நிறுவது என்று பார்ப்போம். ஆரம்பமாக நீங்கள் மீண்டும் Virtual PC க்கு செல்லவேண்டும். அங்கே நீங்கள் உருவாக்கிய புதிய Virtual Machine யை காணலாம்.

கணணியில் Virtual PC யை பயன்படுத்தி விண்டோஸ் 7 நிறுவுதல்-01

முதலில் நாம் Virtual PC என்றால் என்ன? இதன் பயன்பாடு என்ன? என்பதை அறிந்துகொள்வோம்.  Virtual PC என்பது ஒரு இலவச மென்பொருள் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் சட்டரீதியாக வெளியிடப்படும் ஒரு அப்பிளிக்கேசன். 


இது உங்களுடைய தனிப்பட்ட virtual machines யை உங்களுடைய இயக்க அமைப்பினுள் உருவாக்குவதற்கு உதவி செய்கின்றது. இந்த அப்பிளிகேசன் புதிய ஒபெரடிங் சிஸ்டங்களை பரிசோதித்து பார்பதற்கும், கணணியின் புதிய சூழல்களை கற்பதற்கும் பயன்படுகின்றது. இனி எவ்வாறு இதை கணணியில் நிறுவது என்று பார்ப்போம். 

விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்க்ரீனை (Start Screen) தனிபயனாக்குதல் (Customize) வகைகள்

இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் ஆனது முந்தய விண்டோஸ் (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 ) ஒபெரடிங் சிஸ்டங்களை விட கவர்ச்சிகரமாக ஆப்பிள் ஒபெரடிங் சிஸ்டத்துக்கு நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 யை பல பற்றி பயனர்கள் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக தெரிவித்தாலும், சிலர் விண்டோஸ் 8 OS பயன்படுத்துவதற்கு கடினமாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் விண்டோஸ் 8 யில் காணப்படும் ஸ்டார்ட் ஸ்க்ரீன் முற்றிலும் மாறுபட்டதாகவும், பல வசதிகளை இலகுவாக பயன்படுத்த கூடியவாரு ஒரே திரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய பதிவில், விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்க்ரீனை எத்தனை வகைகளில் தனிப்பயனாக்குவது (Customize) என்று பார்ப்போம்.